பலநூறு கோடிகளுடன் புழங்கும் 90ஸ் நடிகை.. எல்லாத்துக்கும் அந்த அரசியல்வாதிதான் காரணமாம்!
சென்னை: இந்த நடிகை தனது குழந்தை பருவத்தில் இருந்து நடித்து வருகிறார். இப்படி இருக்கும்போது நடிகை திருமணத்திற்குப் பின்னர் நடிக்காமல் இருந்தார். ஆனால் அவர் திருமணத்திற்கு முன்னர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரது பெரும்பான்மையான படங்கள் ஹிட். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தினார்.
இவர் சினிமாவில் பரபரப்பாக இயங்கியபோது ஒரு நடிகருடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டார். குறிப்பாக நடிகரை தனது படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வரச் சொல்லி, ஷூட்டிங் முடிந்ததும் இருவரும் காரில் கிளம்பி விடுவார்களாம். ஒரு கட்டத்தில் நடிகருக்கு வேறு ஒருவருடன் நெருக்கம் அதிகமாக நடிகையை கழட்டி விட்டு விட்டார். அதன் பின்னர் வீட்டில் சொல்லுகிற வரை திருமணம் செய்து கொண்டு அமைதியாக இருப்பது நல்லது என முடிவெடுத்து திருமணமும் செய்து கொண்டார்.
அறிமுகமான அரசியல்வாதி: திருமணத்திற்குப் பின்னர் பெரும்பாலும் நடிப்பதை தவிர்த்து வந்தார். தனது குழந்தை ஓரளவுக்கு வளர்ந்த பின்னர் நடிகை நடிக்க முடிவெடுத்தார். அதுவும் தமிழ் சினிமாவில் நடிக்காமல் பக்கத்து மாநில மொழிப் படங்களில் நடித்து வந்தார். நிம்மதியான திருமண வாழ்க்கையில் இடி இறங்கியதைப் போல நடிகையின் கணவர் திடீரென மரணமடைந்தார். நடிகைக்காக பலரும் பரிதாபப்பட்டார்கள். அதன் பின்னர்தான் நடிகைக்கு ஒரு அரசியல்வாதியின் அறிமுகம் கிடைத்துள்ளது.

நடிகையின் வலையில் அரசியல்வாதி: அந்த அரசியல்வாதியும் பண பலத்துடன் இருந்ததால் நடிகையை தனது வசமாக்கி விட்டார். நடிகையும் பணம் கொட்டிக் கிடக்கிறது. இது நல்ல வாய்ப்பு என அரசியல்வாதியின் மனதுக்கு நெருக்கமானவராக தன்னை மாற்றிக் கொண்டுள்ளார். இதனால் நடிகையின் வலையில் அரசியல்வாதி சிக்கிக் கொண்டாரா, அரசியல்வாதியின் வசியத்தில் நடிகை சிக்கிக் கொண்டாரா என்றே தெரியவில்லையாம்.
பல நூறு கோடிகள்: இப்படி இருக்கும்போது அரசியல்வாதியிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணத்தைக் கறந்து தனது பெயரிலும் தனது குழந்தையின் பெயரிலும் சில பல சொத்துகளை வாங்கிக் குவித்து விட்டாராம் இந்த நடிகை. அதுவும் நடிகை அரசியல்வாதியை கைக்குள் போட்டுக் கொண்ட பின்னர் பல நூறு கோடிகளுக்கு சொத்துக்களைக் குவித்த விட்டாராம். இனி அரசியல்வாதிக்கு செல்வாக்கு குறைந்தாலும் கவலை இல்லை என நடிகை தனது நெருங்கிய வட்டாரத்தில் பேசி வருகிறாராம். 90களில் ஒரு ரவுண்ட் வந்த இந்த நடிகை இப்போது படத்தில் நடிக்காமலே செம ஜாலியாக இருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











