வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் வாரிசை வளர்க்க பார்த்த நடிகர்.. இழுத்து செக் வைத்த பெண் பிரபலம்!

சென்னை: இந்த நடிகர்தான் ஜகஜால கில்லாடி வேலைகளைப் பார்த்து வருகிறார் என்று கூறினால், பலரும் நம்ப மாட்டார்கள். இந்த பூனையும் பால் குடிக்குதா என்ற மனநிலையில் தான் அனைவரும் இருப்பார்கள். அப்படி இருக்கும்போது இந்த நடிகர் வாய்ப்பு கிடைத்த இடத்தில் எல்லாம் வாரிசை வளர்க்க பார்த்துவிட்டு, கிரேட் எஸ்கேப் ஆக முயற்சித்துள்ளார். அதனால் அவரது வாரிசை சுமக்கும் பெண் பிரபலம் அவருக்கு இழுத்து செக் வைத்துள்ளார்.

இந்த நடிகருக்கு ஏற்கனவே திருமணமாகி பெயர் சொல்லும் வாரிசுகள் உள்ளனர். மனைவியும் கண்ணுக்கு லட்சணமான குடும்பப்பாங்கான மனைவிதான். ஆனால் நடிகர் அடிக்கடி வேலை விஷயமாக வெளியூர் செல்ல வேண்டி உள்ளதால், அவர் தனது காம சேட்டைகளை அரங்கேற்ற ஒரு பெண் பிரபலத்தை தன் வலையில் வீழ்த்தியதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே திருமணமானவர், குழந்தைகளுக்கு அப்பா என்று எல்லாம் தெரிந்தும் நடிகர் தன்னிடம் கொஞ்சம் அட்வாண்டேஜ் எடுத்து பழகுவது குறித்து அந்த பெண் பிரபலம் யோசித்திருந்தால், இன்றைக்கு வாயும் வயிறுமாக இருந்திருக்க மாட்டார். ஆனால் அவர் என்ன நினைத்தாரோ என்னவோ, இப்போது நடிகரை நம்பி நடு ஆற்றில் நிற்கும் நிலை அவருக்கு வந்துவிட்டது.

Tamil Cinema Gossip Women Celebrity Who Plans Defame To Actor Who Was Gives False Promise

இரண்டாவது திருமணம்: அதாவது நடிகர் வெளியூருக்குப் போகும்போது எல்லாம் இந்த பெண் பிரபலத்திற்கு டிக்கெட் போட்டுக் கொடுத்து அங்கு எல்லாம் தனது காம சேட்டைகளை அரங்கேற்றியுள்ளார். இதனால் அந்த பெண் பிரபலமோ கர்ப்பமாகி விட, அது குறித்து நடிகரிடம் கூறியுள்ளார். நடிகரோ கலைத்துவிட சொல்லி கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் பெண் பிரபலம் கருவை கலைக்க முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். இதனால் நடிகரோ வேறு வழி இல்லாமல், வளைகாப்பு நடத்த வேண்டிய காலத்தில் தாலியைக் கட்டியுள்ளார்.

அடிதடி: அதன் பின்னர் முதல் மனைவியுடன் எப்போதும் போல வாழ்க்கையை தொடர்ந்து கொண்டு இருந்துள்ளார். இது நடிகரின் இரண்டாவது மனைவிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்த, நடிகர் இருக்கும் பொது இடத்திற்கு சென்று கடுமையாக திட்டி தீர்த்துள்ளார். அப்போது அந்த பெண் பிரபலம் கர்ப்பமாக இருக்கிறார் என்று கூட பார்க்காமல் நடிகர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண் பிரபலம் நடிகருக்கு இழுத்து செக் வைக்க முடிவெடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. விஷயத்தைக் கேள்விப்பட்டவர்கள் வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் வாரிசை வளர்க்க பார்த்த நடிகருக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்பதுதான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X