twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திரை உலகினர் நடத்திய கருணாநிதி நினைவேந்தல்... கமல் ஆப்செண்ட்!

    |

    சென்னை: திரையுலகம் சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல் பங்கேற்கவில்லை.

    தமிழ்நாட்டில் ஐந்து முறை முதலமைச்சராக இருந்த திமுக தலைவர் கருணாநிதி, கடந்த செவ்வாய்க்கிழமை உடல் நலக்குறைவால் காலமானார். லட்சக் கணக்கானோர் பங்கேற்ற இறுதி ஊர்பலத்துக்கு பிறகு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி பின்புறம் கருணாநிதியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

    Tamil cinema industry gathers for Karunanidhi

    இந்நிலையில், கருணாநிதியின் மறைவிற்கு தமிழ் திரை உலகம் சார்பில் இன்று நினைவேந்தல் கூட்டம் சென்னை காமராஜர் அரங்கில் நடத்தப்பட்டது. இதில் திரைத்துறையை சேர்ந்த அனைத்து சங்க நிர்வாகிகளும் ,அதன் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

    Tamil cinema industry gathers for Karunanidhi

    குறிப்பாக நடிகர் சங்கப் பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், நடிகர் சங்கத் தலைவர் நாசர், நடிகர் ரஜினி உள்ளிட்டோர் பங்கேற்று கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த விழாவில் பேசிய ரஜினி, தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார்.

    ஆனால், இந்த நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பங்கேற்கவில்லை. அவர் ஏன் பங்கேற்கவில்லை என்பது குறித்து நடிகர் சங்கத்திடம் விளக்கம் அளித்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால் அதன் விபரம் தெரிய வரவில்லை.

    English summary
    Actor Kamalhassan was absent in the tamil cinema industry's meeting for the DMK president Karunanidhi.'s demise held in Chennai today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X