twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொஞ்ச நஞ்சம் இருக்கும் ரசிகர்களையும் இழக்கும் தமிழ் சினிமா!

    By Shankar
    |

    Recommended Video

    ரஜினிக்கு நண்பன் விஷாலுக்கு எதிரியான தியேட்டர் சங்க நிர்வாகிகள்- வீடியோ

    ஆளாளுக்குப் போட்டி போட்டு ஸ்ட்ரைக் அறிவிக்கிறார்கள். ஆனால் மக்களும் அரசாங்கமும் 'ஓ... ஐ ஸீ!' என்று பதினாறு வயதினிலே டாக்டர் போல எதற்குமே ரியாக்‌ஷன் கொடுக்காமல் கடந்துக்கொண்டிருக்கிறார்கள்.

    தமிழ் சினிமா மோசமான நிலையில் இருக்கிறது. திரையரங்குகள் குறைந்தது, மோசமான படங்களின் வருகை, தவறான முடிவுகள், வேறு வேறு பொழுதுபோக்குகள் ஆக்ரமிப்பு என்று பல காரணங்கள் இருக்கின்றன. இந்த வரிசையில் தற்போதைய சினிமாக்காரர்களின் ஈகோவையும் சேர்த்துக்கொள்ளலாம். தயாரிப்பாளர் சங்கம் ஸ்ட்ரைக் அறிவித்ததற்கு போட்டியாக திரையரங்கு உரிமையாளர்களும் அறிவித்திருக்கிறார்கள். இப்போது படப்பிடிப்பும் நிறுத்தம் என்று அறிவித்திருக்கிறது தயாரிப்பாளர் சங்கம். திரைப்படத்துறையை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பங்களின் நிலை என்ன ஆவது?

    Tamil Cinema loses its lovers fastly

    ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். கூத்தாடி எத்தனை பட்டாலும் கண்டுகொள்ள யாரும் வரமாட்டார்கள். இது புரியாமல் வீம்புக்கு ஸ்ட்ரைக் பண்ணி தன் தலையில்தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்கிறது தமிழ் திரையுலகம்!

    English summary
    The recent strikes announced by cinem unions have affected cinema technicians and industry. Due to these strikes the industry is losing movie lovers.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X