twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தொடரும் சோகம்.. ஒரே மாதத்தில் 5 பேரை வாரிக்கொடுத்த தமிழ் சினிமா.. ஒரே நாளில் அடுத்தடுத்து இருவர்!

    |

    சென்னை: ஒரே மாதத்தில் ஐந்து பிரபலங்களை வாரிக் கொடுத்து சோகத்தில் மூழ்கி கிடக்கிறது தமிழ் சினிமா.

    கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய லட்சக்கணக்கான மக்களை பலி கொண்டது. கொரோனா பாதிப்பாலும் கொரோனாவால் ஏற்பட்ட வறுமையாலும் பலர் மடிந்தனர்.

    என் முதல் படத்தின் ஒளிப்பதிவாளர்.. இயக்குநர் கே.வி. ஆனந்த் மறைவால் மனம் உடைந்து போன விஷால்என் முதல் படத்தின் ஒளிப்பதிவாளர்.. இயக்குநர் கே.வி. ஆனந்த் மறைவால் மனம் உடைந்து போன விஷால்

    கொரோனாவின் கோர நாக்குகளுக்கு சாமானிய மக்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்கள் சினிமா பிரபலங்கள் என பலரும் இரையாகி வருகின்றனர்.

    8 பிரபலங்கள்..

    8 பிரபலங்கள்..

    அந்த வகையில் தமிழ் சினிமா பல பிரபலங்களை இழந்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களில் கொரோனாவால் மட்டுமின்றி தமிழ் சினிமா 8 பிரபலங்களை இழந்துள்ளது.

    இயக்குநர் எஸ்பி ஜனநாதன்

    இயக்குநர் எஸ்பி ஜனநாதன்

    கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பிரபல இயக்குநரான எஸ்பி ஜனநாதன் காலமானார். திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மரணம் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    நடிகர் தீப்பெட்டி கணேசன்

    நடிகர் தீப்பெட்டி கணேசன்

    அவரை தொடர்ந்து பிரபல குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகரான தீப்பெட்டி கணேசன் கடந்த மாதம் 21ஆம் தேதி காலமானார். தென்மேற்குப் பருவக்காற்று, பில்லா 2, நீர்ப்பறவை, ரேணிகுண்டா, கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தீப்பெட்டி கணேசன் உடல் நலக்குறைவால் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

    நடிகர் வெங்கடேஷ்

    நடிகர் வெங்கடேஷ்

    அவரை தொடர்ந்து கடந்த மாதம் 22ஆம் தேதி சினிமா மற்றும் சீரியல்களில் குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் வெங்கடேஷ் காலமானார். 52 வயதான வெங்கடேஷ் நடிகர் நெப்போலியனின் உறவினர் ஆவார். மாரடைப்பு காரணமாக வெங்கடேஷ் உயிரிழந்தார்.

    நடிகர் விவேக்

    நடிகர் விவேக்

    அவரை தொடர்ந்து சின்னக்கலைவாணர் என அழைக்கப்பட்ட பிரபல நகைச்சுவை நடிகரும் குணச்சித்திர நடிகருமான விவேக் காலமானார். கடந்த 16ஆம் தேதி மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் கடந்த 17ஆம் தேதி அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார்.

    சூப்பர்குட் பிலிம்ஸ் பாபு ராஜா

    சூப்பர்குட் பிலிம்ஸ் பாபு ராஜா

    விவேக் மறைவில் இருந்தே தமிழ் சினிமா இன்னும் மீளாத நிலையில் இந்த ஒருவாரத்தில் மட்டும் அடுத்தடுத்து 4 சினிமா பிரபலங்களை இழந்துள்ளது தமிழ் சினிமா. கடந்த 26ஆம் தேதி அரசு, சத்ரபதி உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ள பிரபல தயாரிப்பாளரான சூப்பர் குட் பிலிம்ஸ் பாபு ராஜா காலமானார் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

    இயக்குநர் தாமிரா

    இயக்குநர் தாமிரா

    இதேபோல் பிரபல இயக்குநரான தாமிரா கடந்த 27ஆம் தேதி காலமானார். ரெட்டைச்சுழி, ஆண் தேவதை ஆகிய படங்களை இயக்கியுள்ள தாமிரா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி காலை தாமிரா காலமானார்.

    தெறி செல்லத்துரை

    தெறி செல்லத்துரை

    இயக்குநர் தாமிரா மரணமடைந்து 3 நாட்களே ஆன நிலையில் 24 மணி நேரத்தில் இருவரை இழந்துள்ளது தமிழ் சினிமா.மூத்த நடிகரான தெறி செல்லத்துரை மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். சிவாஜி, கத்தி, மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள செல்லத்துரை நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார்.

    இயக்குநர் கேவி ஆனந்த்

    இயக்குநர் கேவி ஆனந்த்

    இதேபோல் அயன், அனேகன், கோ, மாற்றன், கவண், காப்பான் ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கேவி ஆனந்த் இன்று காலமானார். தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த இயக்குநர் கேவி ஆனந்த் இன்று காலை கார்டியாக் அரெஸ்ட் காரணமாக காலமானார். அடுத்தடுத்து தமிழ் சினிமா பிரபலங்கள் மரணமடைவது ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    English summary
    Tamil Cinema lost 8 celebrities in two months. In the month of April 5 celebrities passed away.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X