பெற்றோரின் பணத்தாசை.. வாழ்க்கையை தொலைத்து.. சன்னியாசிபோல் வாழும் நடிகையின் கதை!

சென்னை: 60 மற்றும்70 காலகட்டத்தில் தென்னிந்திய திரையுலகில் ஒளிவீசும் ராணியாகவும், அன்றைய இளைஞர்களின் கனவு கன்னியாகவும் வலம் வந்தவர் நடிகை காஞ்சனா. வெள்ளித்திரையில் பல நடிகர்களுடன் இவர் தோன்றினாலும், அனைவரையும் தன்வசப்படுத்தக்கூடிய ஆற்றல் பெற்றவராகவே இருந்துள்ளார் காஞ்சனா. கவிஞர்களின் கற்பனைக்கும், வர்ணனைக்கும் ஏற்றார் போல முகமும், உருவமும் கொண்ட ஒரு சில நடிகைகளில் காஞ்சனா மிகவும் குறிப்பிடத்தக்கவர்.

இவ்வாறு தன் அழகால் ரசிகர்களின் ஏகபித்த வரவேற்பை பெற்ற காஞ்சனா. சில படங்களில் தன் சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தி வந்த போதும் திரை துறையில் மிகப் பெரும் ஒரு இடத்தை பிடித்தாலும், திரையில் முத்திரையை பதிக்க தவறினார். தன் சொந்த வாழ்க்கையில் சில சறுக்களை சந்திக்க காரணமாக அமைந்தது என்ன என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Tamil cinema Old Actress Kanchana painful story
Photo Credit:

பணக்கார குடும்பம்: நடிகை காஞ்சனா, சாஸ்திரி மற்றும் வித்யலதா தம்பதிகளுக்கு மூத்த மகளாக பிறந்தார் காஞ்சனா. இவர் செல்வ செழிப்பான ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தார். மிக வசதியான குடும்பம் என்றாலும் பெற்றோர்களுக்கு இடையே இருந்த பிணக்கு மற்றும் சச்சரவு காரணமாக பெரும்பாலும் தனிமையிலேயே இருந்த காஞ்சனா, அன்புக்கு ஏங்கிய ஒரு குழந்தையாகவே வளர்ந்துள்ளார். இதன் காரணமாகவே தன் தனிமையை போக்க நினைத்த அவர் தன் கவனத்தை பரதம், சங்கீதம் போன்றவற்றின் செலுத்த தொடங்கியுள்ளார்.

திரையில் தடம் பதித்தார்: இளம் வயதிலேயே சங்கீதம், பரதன் போன்றவற்றில் கைதேர்ந்தவராக மாறினார் காஞ்சனா. பெரும்பாலான நேரத்தை நண்பர்களுடைய கழித்து வந்துள்ளார். அப்போது தான், தனது ஆண்டி வீட்டில் வசித்து வந்த தெலுங்கு நடிகர் அறிமுகம் காஞ்சனாவிற்கு கிடைத்தது. அதன் பின், நாகேஸ்வராவின் நடிப்பில் நடிகை அஞ்சலிதேவின் தயாரிப்பில் 1957ஆம் ஆண்டு வெளியான ஸ்வர்ணசுந்தரி என்னும் தெலுங்கு படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பே பெற்றார் காஞ்சனா. அதே படம் தமிழில் மணாளனே மங்கையின் பாக்கியம் என்ற பெயரில் வெளியானது. அந்த படத்தில் தேவதைகளில் ஒருவராக சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

வளைத்து போட்டார்: தனது பதினெட்டாவது வயதிலேயே சினிமாவில் தன் முதல் அடியை எடுத்து வைத்த காஞ்சனா, சினிமாவை விட்டு விலகி படிப்பில் கவனம் செலுத்தினார். இந்த சமயத்தில் தான் காஞ்சனாவின் தந்தை செய்து வந்த வியாபாரம் நஷ்டத்தை கொடுக்க காஞ்சனாவின் குடும்பம் கடன் சுமையால் தத்தளிக்க தொடங்கியது. இதையடுத்து, கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காஞ்சனா, தன் குடும்ப கஷ்டத்தை போக்கும் பொருட்டு இந்தியன் விமானத்தில் விமான பணிப்பெண்ணானார். அந்த விமானத்தில் ஸ்ரீதர் பயணம் செய்தார். காஞ்சனாவின் அழகும், கவர்ச்சியான சிரிப்பாலும் ஈர்க்கப்பட்ட அவர். காதலுக்கு நேரமில்லை படத்தின் கதாநாயகியாகி நடித்து திரை உலகில் தன் முதல் பிரவேசத்தை தொடங்கினார். இந்த படத்தில் ஆரம்பகாட்சியில் வரும் "என்ன பார்வை உந்தன் பார்வை" என்ற பாடலின் தோன்றும் காஞ்சனா தன் பார்வையால் தமிழ் ரசிகர்கள் அனைவரையும் வளைத்துப் போட்டார்.

பணத்தின் மீது ஆசை: முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த காஞ்சனா, கொடி மலர், மோட்டார் சுந்தரம் பிள்ளை, பறக்கும் பாவை போன்ற படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து வந்தார். அதன் பின் அதே கண்கள், பாமா விஜயம், தங்கை, பொன்ணு மாப்பிள்ளை, சாந்தி நிலையம் போன்ற படத்தில் நடித்தார். அந்த படம் தான் காஞ்சனாவின் நடிப்பிற்கு தீனிப்போடும் திரைப்படமாக அமைந்தது. சினிமாவில் ஏற்க இரக்கங்களை சந்தித்து வந்த காஞ்சனா, தனது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி யோசிக்காவே இல்லை. அவரின் பெற்றோரும் காஞ்சனாவிற்கு நல்ல ஒரு திருமண வாழ்க்கை அமைத்து கொடுக்க வேண்டும் என்கிற எண்ணமே இல்லாமல் இருந்தனர்.

பிச்சை எடுக்கிறார்: காஞ்சனாவிற்கு பட வாய்ப்பு குறைந்து போக படத்தில் கௌரவ வேடத்தில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் தான் சம்பாதித்து சேர்த்து வைத்து மொத்த சொத்துக்களையும் இழந்தார். அந்த நேரத்தில் கோவிலில் சாதாரண உடையில் இருந்த காஞ்சனாவைப் பார்த்த பத்திரிக்கையாளர் ஒருவர், காஞ்சனா பிச்சை எடுத்து சாப்பிடுவதாக எழுதிவிட்டார். இதனால், மன வேதனை அடித்த அவர், நான் நன்றாக இருப்பதாக விளக்கம் கொடுத்தார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு, காஞ்சனா தனது சொத்துக்களை பெற்றோரிடம் இருந்து மீட்டு எடுத்து, அதை திருப்பதிக்கு காணிக்கையாக கொடுத்துவிட்டு, தற்போது ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

More from Filmibeat

Read more about: kanchana காஞ்சனா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X