சினிமாக்காரர்களின் கலைஞர் நகரம்-அடிக்கல் நாட்டினார் கருணாநிதி

By Sudha

Karunanidhi
தமிழ்த் திரையுலகினர் அமைக்கும் கலைஞர் நகரம்-அடிக்கல் நாட்டினார் கருணாநிதி

தமிழ் திரையுலகினருக்காக தமிழக அரசு இலவசமாக வழங்கியுள்ள இடத்தில் வீடுகள் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அமையும் பிரமாண்டமான கலைஞர் நகரம் என்ற திரைப்பட நகருக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது.

பைய்யனூர் பகுதியில் சினிமாத்துறையினருக்கு 96 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு இலவசமாக வழங்கியுள்ளது. இங்கு அவர்கள் வீடுகள் கட்டிக் கொள்ளவுள்ளனர். மேலும், கலைஞர் நகரம் என்ற பெயரில் பிரமாண்ட திரைப்பட நகரத்தையும் நிர்மானிக்கவுள்ளனர்.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா, பைய்யனூரில் இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்திற்கு மாற்றப்பட்டது.

காலை பத்து மணிக்கு நடந்த விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு, பத்தரை மணிக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.

விழாவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய, மாநில அமைச்சர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், மம்முட்டி, சரத்குமார், குஷ்பு, இயக்குநர்கள் கே.பாலச்சந்தர், பாரதிராஜா உள்பட திரையுலகினர் திரளாக கலந்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X