Kalakshetra : கலாக்ஷேத்ரா விவகாரத்தில் மாணவிகள் பலி ஆடுகளாக ஆக்கப்படுகின்றனர்..அபிராமி பேட்டி!

சென்னை : கலாக்ஷேத்ரா விவகாரத்தில் நான் மாணவிகளுக்கு எதிராக பேசவில்லை, இதில் மாணவிகள் பலி ஆடுகளாக ஆக்கப்படுகின்றனர் என்று அபிராமி பேட்டியில் கூறியுள்ளார்.

Recommended Video

Kalakshetra-வுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வேலை நடைபெறுகிறது - நடிகை Abhirami Venkatachalam

கலாக்ஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்ததையடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் கலாக்ஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் மீது மகளிர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், ஹைதராபாத்தில் அவரை போலீசார் கைது செய்தனர்.

Tamil cinema popular actress Bigg boss abhirami First interview about kalakshetra

சர்ச்சையில் சிக்கிய அபிராமி : இந்த விவகாரத்தில் பிக்பாஸ் அபிராமி கலாக்ஷேத்ராவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து சர்ச்சையில் சிக்கினார். இது குறித்து பேட்டி அளித்த அபிராமி, கலாக்ஷேத்ரா விவகாரத்தில் நான் சொன்ன கருத்தில் தெளிவாக இருக்கிறேன், எந்த விஷயத்தையும் நான் மாற்றிக்கொள்ளவில்லை. கலாக்ஷேத்ரா சொல்லத் தெரியாதவர்கள் இதைப்பற்றி பேசாதீர்கள் என்று சொன்னதற்கு காரணம் எதையுமே முழுசா தெரிந்து கொள்ளாமல் பேசாதீர்கள் என்ற விதத்தில் தான் சொன்னேன். யாரையும் தாக்க வேண்டும் என்பது என் நோக்கம் இல்லை.

புகார் உண்மையா : மாணவிகள் முன் வந்து புகார் கொடுக்கிறார்கள் என்றால், உண்மையில் அங்கு என்ன நடந்தது, மாணவி சொல்லும் புகார் உண்மையா, என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் பலர் கருத்து கூற தொடங்கிவிட்டார்கள். இதனால் தான், எதையும் தெரிந்து கொள்ளாமல் பேசாதீர்கள் என்று சொன்னேன், யாரையும் தவறாக பேச வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

அழுத்தம் கொடுக்கப்படுகிறது : மேலும், நான் பாதிக்கப்படுபவர்களுக்கு எதிராக பேசவில்லை. அவர்களிடமும் விசாரிக்க வேண்டும், அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் ஏற்கனவே நாங்கள் படிக்கும் பொழுதும் இப்படி மூளைச்சலவை செய்யப்பட்டு சில மாணவிகள் அழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டார்கள் அது இப்போதும் தொடரலாம் என்று நான் நினைக்கிறேன்.

ஆதரவாக பேசிய பெண் போராடுகிறாள் : ஹரி சார் பற்றி புகார் வந்த எழுந்த போது ஒரு பெண் கவலைப்படாதீங்க சார் நாங்க இருக்கோம் எல்லாம் சரியாகிவிடும், நீங்கள் கொஞ்சம் தைரியமாக இருங்கள் என்று சொன்ன பெண் போராட்டத்தில் முன்னாடி நின்று கொண்டு We Want Justiceனு சொல்லுறாங்க. அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் போராட்டத்தில் எனக்கு விருப்பம் இல்லை என்னனை கட்டாயப்படுத்தி நிற்கவைத்தார்கள் என்று சொன்ன ஆதாரத்தையும் காட்டினார்.

பலி ஆடுகள் : இந்த விவகாரத்தில் மாணவிகள் பலி ஆடுகளாக ஆக்கப்படுகிறார்கள். ஒருவேளை மாணவிகள் உண்மையில் பாதிக்கப்பட்டிருந்தால் நான் அவர்களின் பக்கம் நிற்பேன், நேர்கொண்ட பார்வையில் சொன்னது மாதிரி NO Means NO தான் எனது நிலைப்பாடும். ஆனால் என்னையே ஹரி பத்மநாபனுக்கு எதிராக பேச வைக்க முயற்சித்தார்கள். இந்த விவகாரத்தில் நிறைய கேள்விகள் இருக்கிறது. உண்மையில் நடந்ததா, நடக்கவில்லையா என்று என்னால் எதையுமே சொல்லமுடியாது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X