காதலித்து கல்யாணம்.. ஆனால் பிரிவு.. குடும்ப வாழ்க்கையில் புயல் கிளப்பிய விவாகரத்து சர்ச்சைகள்!

சென்னை: சோஷியல் மீடியா, யூடியூப், செய்தி ஊடகம் என எந்த பக்கம் திரும்பினாலும்,
விஜய் - சங்கீதா விவாகரத்து சர்ச்சை பற்றி தான் பேசுபொருளாக உள்ளது. விஜய் பண்ணது தப்பு, சங்கீதா செய்தது தவறு என பலவிதமான கருத்துக்கள் எழுந்து வரும் இந்த நேரத்தில், தமிழ்சினிமாவில் திருமணம் செய்து கொண்டு பல ஆண்டுகள் வாழ்ந்த திரை நட்சத்திரங்கள் விவாகரத்து சர்ச்சையில் சிக்கி ரசிகர்களிடையே பேசப்பட்டுள்ளனர். அதைப் பற்றிய இந்த செய்தியில் பார்க்கலாம்.

"திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என சொல்வார்கள்" பொருத்தம் பார்த்து, ஜாதகம் பார்த்து செய்த திருமணங்களும் சில ஆண்டுகள் கூட நீடிப்பது இல்லை. உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களும் பிரிந்து விடுகின்றனர். இதற்க காரணம் புரிதல் இல்லாதது தான் விவாகரத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது. ஆனால், 27 ஆண்டுகள், 17 ஆண்டுகள் உடல், உயிராக வாழ்ந்தவர்கள் ஏன் பிரிகிறார்கள்? அவர்களுக்குள் புரிதல் இல்லையா? என்பது மில்லியன் டாலர் கேள்விகாக உள்ளது.

Tamil Cinema Kollywood divorce

நட்சத்திர தம்பதிகள்: விஜய், சங்கீதா மனம் ஒத்த தம்பதிகளாக கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் வாழ்ந்த இருவரும் தற்போது விவாகரத்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்கள். கடந்த 27ந் தேதி, விஜயின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதால் விவாகரத்து வேண்டுமென கேட்டுள்ளார். விஜய் தற்போது தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இருக்கும் நிலையில், இது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

கருத்து வேறுபாடு: ஜெயம் ரவி, ஆர்த்தி இருவரும் 2009 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு ரவி மோகன் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடினார். 15 ஆண்டுகள் இணைபிரியா தம்பதிகளாக வாழ்ந்து வந்த இவர்களின் பிரிவு பலரை கவலையில் ஆழ்த்தியது.

தனுஷ்,ஐஸ்வர்யா: 20 ஆண்டு திருமண வாழ்க்கைக்குப் பிறகு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அறிவித்தனர். இவர்களுக்கு இரண்டு மகன் இருக்கும் நிலையில் குழந்தைகளுக்காக இருவரும் சேர வேண்டுமென சமரசம் பேசப்பட்ட போது, 2024ம் ஆண்டு இருவரும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இது தனுஷின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Tamil Cinema Kollywood divorce

இணைபிரியா தம்பதிகள்: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்-சாய்ரா பானு இப்படி ஒரு ஜோடியை பார்க்கவே முடியாது என சொல்லும் அளவிற்கு இருவரும் அவ்வளவு இனக்கமாக இருந்தனர். ஆனால், சாய்ரா பானு திடீரென விவாகரத்து கேட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். திருமணமாகி 29 ஆண்டுகள் வாழ்ந்த இவர்களாக விவாகரத்து கேட்கிறார்கள் என ஒட்டுமொத்த இணையமுமே பற்றி எரிந்தது. ஆனால், சாய்ரா பானு, தற்போது வரை தன்னை ஆர். ரஹ்மானின் முன்னாள் மனைவி என்று சொல்வதை விரும்பவே இல்லை.

பிரிந்தனர்: இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவியை 2013 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. 12 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இருவரும், கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அறிவித்திருந்தனர். பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றனர்.

Tamil Cinema Kollywood divorce

இரண்டாவது திருமணம்: நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகை லலிதா குமாரியை 1994ஆம் ஆண்டு திருமணம் செய்து கொணடு இருவரும் 15 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர். ஆனால், இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின் பிரகாஷ் ராஜ், போனி வர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ளார்.

இரண்டாவது திருமணம்: நடன இயக்குநரும், நடிகருமான பிரபுதேவா தனது முதல் மனைவி ரம்லத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 1995 முதல் 2011 வரை சுமார் 16 ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வந்தனர். பின் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைகளால் விவாகரத்து நடந்தது. இதையடுத்து பிரபுதேவா இரண்டாவதாக ஹிமானி சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அமலா பால்,ஏ.எல்.விஜய்: அதே போல நடிகை அமலா பால் தலைவன் திரைப்படத்தில் நடித்த போது அந்த படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமண வாழ்க்கை ஓராண்டிலேயே முடிந்துவிட்டதை அடுத்து அவரை பிரிந்து தற்போது அமலா பாலின் நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அண்மையில் தான் ஆண் குழந்தை பிறந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X