»   »  இந்தப் படங்களில் "இவர்கள்" நடித்திருந்தால்

இந்தப் படங்களில் "இவர்கள்" நடித்திருந்தால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் மட்டுமல்ல உலகளவில் எல்லா சினிமாக்களிலும் அவ்வப்போது நடப்பது தான். ஆனால் பின்னாளில் அதனை நினைத்துப் பார்த்தால் இதுவே பரவாயில்லை என்று நினைக்கத் தோன்றும்.

பெரிதாக ஒன்றுமில்லை சில படங்களில் முதலில் நடிக்க ஒருவர் ஒப்பந்தமாவார் பின்பு வேறு சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போக அந்தப் படத்தில் மற்றொரு நடிகரை நடிக்க வைப்பார்கள்.

அந்த மாதிரி ஒரு நடிகர் நடிக்க மறுத்து அந்தப் படங்களில் வேறொரு நடிகர் நடித்த படங்களைப் பற்றி பார்க்கலாம்.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் ரஜினிகாந்த் முதல்வன்,மக்கள் ஆட்சி, ஜக்குபாய் போன்ற படங்களில் நடிப்பதைத் தவிர்த்திருக்கிறார். முதல்வன் படத்தை ஷங்கர் ரஜினியை மனதில் வைத்துத் தான் எழுதினார், ஆனால் ரஜினி யோசிக்கவே அந்தப் படத்தில் அர்ஜுன் நடித்து புகழ் பெற்றார். இன்றளவும் தமிழ்த் திரையுலகின் சிறந்த படங்களில் ஒன்றாக முதல்வன் திரைப்படம் திகழ்கிறது.

ஜக்குபாய்

ஜக்குபாய்

"இறைவா என் நண்பர்களைப் பார்த்துக் கொள் எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்ற வாசகங்களுடன் வெளியான ரஜினியின் போஸ்டர் படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்தப் படத்தையும் ரஜினி தவிர்க்க, பின்னர் சரத்குமார் நடிப்பில் படம் ஒருவழியாக வெளியானது.

கமல்

கமல்

உலகநாயகன் என்று புகழப்படும் நடிகர் கமல்ஹாசன் ஜென்டில்மேன், எந்திரன், பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற படங்களில் நடிப்பதை தவிர்த்தார். ஜென்டில்மேன் மற்றும் எந்திரன் 2 படங்களுமே மாபெரும் வெற்றிப் படங்களாக மாறியது குறிப்பிடத்தக்கது.

விஜய்

விஜய்

விஜய் மறுத்த படங்கள் எல்லாமே சூப்பர்ஹிட் படங்களாக மாறி வசூலில் சாதனை படைத்தவை. இவர் முதல்வன், உன்னை நினைத்து, சண்டக் கோழி, தூள் மற்றும் வேட்டை போன்ற படங்களை தவிர்த்திருக்கிறார். வேட்டை படத்தைத் தவிர மற்ற படங்கள் அனைத்துமே வெற்றியையும்,வசூலையும் ஒருசேரக் குவித்தது குறிப்பிடத்தக்கது.

அஜீத்

அஜீத்

இவர் மறுத்த படங்கள் எல்லாமே சூர்யாவை மாஸ் நடிகராக வளர்த்து விட்ட படங்களாக மாறியது குறிப்பிடத்தக்கது. நேருக்கு நேர், நந்தா, கஜினி (கஜினி மாபெரும் வசூல் சாதனை படைத்தது), நான் கடவுள் மற்றும் நியூ ஆகிய படங்களை அஜீத் தவிர்த்திருக்கிறார். இவர் தவிர்த்த படங்கள் இன்று இவருக்கு சமமாக சூர்யாவை வளர்த்து விட்டிருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.

சூர்யா

சூர்யா

சூர்யா தவிர்த்த படங்கள் பெரியளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் நடித்திருந்தால் நல்ல பெயர் கிடைத்திருக்கும்.நண்பன், பிரியாணி, முகமூடி, அவன் இவன் போன்ற படங்களை சூர்யா தவிர்த்திருக்கிறார்.

சிம்பு

சிம்பு

சிம்பு நடிக்க மறுத்த படங்கள் எல்லாமே நல்ல வெற்றி பெற்ற படங்கள் தான். கோ, பாய்ஸ், நண்பன் ஆகிய படங்களில் நடிப்பதை சிம்பு தவிர்த்தார்.

விமல்

விமல்

எங்கேயும் எப்போதும் படத்தில் விமல் நடிக்க வேண்டிய வேடத்தில் தான் சர்வானந்த் நடித்தார். அந்தப் படம் அவருக்கு நல்லதொரு பெயரைப் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.

சாந்தனு

சாந்தனு

களவாணி படத்தில் முதலில் நடிகர் சாந்தனு நடிப்பதாகத் தான் இருந்தது, ஆனால் கிராமத்து வேடம் எனக்குப் பொருந்தாது என்று சாந்தனு களவாணியைத் தவிர்க்க, விமல் நடித்து படம் ஹிட்டானது. இதே போன்று பாய்ஸ் படத்தில் நடிப்பதையும் சாந்தனு தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.

அந்தந்தப் படத்துல அவங்களே நடிச்சிருந்தா...நான் இத எழுத வேண்டிய அவசியம் இருந்திருக்காது...

English summary
Tamil Cinema: The Following Top Actors Rajini, Kamal, Ajith, Vijay, Surya, Simbu, Vimal and shanthanu Missed Movies List.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil