கேரள நடிகையுடன் மோதிய வில்லன் நடிகர் வேலுவுக்கு கொலை மிரட்டல்

கேரளாவைச் சேர்ந்தவர் பாக்யாஞ்சலி. இவர் தமிழில் நடிக்க வந்துள்ளார். நெல்லு என்ற படத்தில் நடித்துள்ளார். அடுத்து உன்னையே காதலிப்பேன் என்ற படத்திலும் நடித்துள்ளார். இதில் வில்லனாக நடித்தவர் வேலு.
சமீபத்தில் வேலு தன்னை கல்யாணம் செய்து கொள்ளுமாறு கூறி மிரட்டுவதாகவும், வேறு சில மிரட்டல்களை விடுப்பதாகவும் போலீஸில் புகார் கொடுத்தார் இந்த பாக்யாஞ்சலி. இதையடுத்து போலீஸார் பாக்யாஞ்சலியிடம் விசாரணை நடத்தினர்.
வேலுவையும் விசாரணைக்கு அழைத்திருந்தனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். மேலும் முன்ஜாமீன் கோரி கோர்ட்டை அணுகினார். அப்போது பாக்யாஞ்சலி தனக்கு எழுதிய காதல் கடிதங்களை கோர்ட்டில் சமர்ப்பித்தார். இதன் பின்னர் அவருக்கு முன்ஜாமீன் கிடைத்தது.
முன்ஜாமீன் வாங்கிய கையோடு அவர் போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார். விசாரணையின்போது தன்னிடம் பாக்யாஞ்சலி கடன் வாங்கியிருந்தார். அதைக் கேட்டதால் தன் மீது பொய்யான புகாரைக் கொடுத்துள்ளார் என்று குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் தற்போது வேலு துணை கமிஷனர் லட்சுமியை (இவர்தான் இந்த விவகாரத்தை விசாரித்து வருகிறார்) சந்தித்து ஒறு புகார் கொடுத்தார்.
அதில், பாக்கியாஞ்சலியுடன் மோதக் கூடாது, தொடர்பு கொள்ளக் கூடாது, என செல்போனில் சிலர் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதுதொடர்பான ஆதாரங்களையும் அவர் சமர்ப்பித்துள்ளார்.
இதுகுறித்து தனியாக ஒரு விசாரணைக்கு துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











