இயக்குனர் கே வி ஆனந்த் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம்!
சென்னை : தமிழ் சினிமாவிற்கு வியக்கத்தக்க பல படைப்புகளை கொடுத்தவர் இயக்குனர் கேவி ஆனந்த்.
Recommended Video
கடைசியாக காப்பான் திரைப்படத்தை இயக்கி இருந்தார் இதில் சூர்யா, ஆர்யா ,சாயிஷா, மோகன்லால் ஆகியோர் நடித்திருந்தனர்.
அடுத்ததாக மல்டி ஸ்டார் திரைப்படம் ஒன்றை இயக்க இருந்த கே வி ஆனந்த் இன்று அதிகாலை திடீரென மாரடைப்பால் காலமான செய்தி திரையுலகை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இயக்குனராக அறிமுகமானார்
பத்திரிக்கையில் புகைப்பட கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கிய இயக்குனர் கேவி ஆனந்த் அதன் பிறகு பல திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். தமிழ் மலையாளம் ஹிந்தி என பல மொழிகளில் பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வந்த இவர் கனா கண்டேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

திருப்புமுனையை ஏற்படுத்திய
சூர்யாவுக்கு மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய அயன், மாற்றான் உள்ளிட்ட மாறுபட்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமாவிற்கு புதிய பரிமாணத்தை கொடுத்ததோடு யாரும் நினைத்துக்கூட பார்க்கமுடியாத படைப்புகளை தமிழ் ரசிகர்களுக்கு அளித்த பெருமை இவரையே சாரும்.

மோகன்லால்
மூன்றாவது முறையாக சூர்யாவுடன் இணைந்து பணியாற்றிய காப்பான் திரைப்படத்தில் ஆர்யா, சாயிஷா, மோகன்லால் என மிகப்பெரிய பட்டாளமே நடித்திருந்தனர். தொடர்ந்து அடுத்ததாக மல்டி ஸ்டார் திரைப்படம் ஒன்றை இயக்க இருந்தார்.

அதிர்ச்சியில் திரையுலகம்
அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது . தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கே வி ஆனந்த் அதிகாலை 3:00 மணி அளவில் மாரடைப்பால் இறந்ததாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக இருந்த கேவி ஆனந்தின் இழப்பை அறிந்த ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்க இவரது உடல் இப்பொழுது சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் உள்ளது காலை 9 மணிக்கு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. கேவி ஆனந்தின் இழப்புக்கு அனைவரும் தங்களது இரங்கல்களை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











