twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உடைந்து சிதறும் டெம்ப்ளேட்டுகள்... வெளிக் கிளம்பி வரும் உலக சினிமாக்கள்.. தலை நிமிரும் தமிழ்

    |

    Recommended Video

    படத்திற்கு லாபம் முக்கியம் இல்லை என்ற ராம்- வீடியோ

    சென்னை: தமிழ் சினிமா மாற ஆரம்பித்து விட்டது. ரெடிமேட் டெம்ப்ளேட்டுகளை உடைத்து தகர்த்து தலை நிமிர்ந்து தரணியெங்கும் எட்டிப் பார்த்து எபக்ட் கொடுக்க ஆரம்பித்து விட்டது.

    ஹீரோவை சுற்றும் ஹீரோயின் அல்லது ஹீரோயினை சுற்றும் ஹீரோ, வில்லனுக்கும் ஹீரோவுக்கும் இடையே மோதல், 4 பாட்டு, கிளைமாக்ஸ் சண்டை என தமிழ் சினிமாவுக்கென ஒரு டெம்ப்ளேட் உண்டு.

    தற்போது இந்த டெம்ப்ளேட்டை உடைத்து, தமிழ் சினிமாக்கள் உலக அரங்கையும் கவர ஆரம்பித்துள்ளன. இது வரவேற்கக் கூடியதாக உள்ளது. அதுகுறித்து ஒரு பார்வை...

    டூலெட்

    டூலெட்

    திரையில் வெளியாவதற்கு முன்பே, 26 சர்வதேச விருதுகளையும், 2017-ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதையும் வென்ற திரைப்படம் "டூலெட்". படத்தின் போஸ்டரில் இதற்கு மேல் இடம் இல்லையே என எண்ணும் அளவுக்கு விருதுகளை வாங்கி குவித்தது இந்த படம். தென்மேற்கு பருவக்காற்று', ‘தாரை தப்பட்டை', ‘பரதேசி', ‘ஜோக்கர்' உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் செழியன், இந்த படத்தை இயக்கியுள்ளார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே, இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

    பேரன்பு ராம்

    பேரன்பு ராம்

    ராம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பேரன்பு திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெளியாவதற்கு முன்னதாகவே, கடந்த ஆண்டு நெதற்லாந்து மற்றும் ஷாங்காயில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நெதர்லாந்தில் நடைபெற்ற 47-வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் 'பேரன்பு' திரைப்படம் திரையிடப்பட்டது.

    சிறந்த இந்திய திரைப்படம்

    சிறந்த இந்திய திரைப்படம்

    போட்டியிட்ட 187 திரைப்படங்களில் முதல் 20 திரைப்படங்களுக்குள் இடம் பிடித்த இந்தியத் திரைப்படம் என்ற சிறப்பைப் பெற்றது. மேலும் சிறந்த ஆசிய படத்திற்கான NETPAC விருதையும் பெற்றது. இதை தொடர்ந்து ஆசியாவின் புகழ்பெற்ற திரைப்பட விழாவான, ஷாங்காய் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்ட பேரன்பு திரைப்படம், மிகுந்த வரவேற்பை பெற்றது.

    படைப்பின் மீது நம்பிக்கை

    படைப்பின் மீது நம்பிக்கை

    படத்தை ஓராண்டுக்கு முன்னரே முடித்துவிட்டாலும், திரைப்பட விழாக்களில் பங்கேற்ற பின்னரே திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டதாக, இயக்குனர் ராம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். லாபத்தை மட்டுமே கணக்கில் கொள்ளாமல் தனது படைப்பின் மேல் அவர் கொண்டிருந்த நம்பிக்கையையும், பேரன்பையுமே இது காட்டுகிறது.

    சினிமாவை வெறும் வியாபாரமாக மட்டும் பார்க்காமல், கலையை மட்டுமே பிரதானமாக கொண்டுள்ள கலைஞர்களால் மட்டுமே இது சாத்தியம்.

    English summary
    Tamil cinema films are making big in International level.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X