twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அட.. பக்கி....!

    By Sudha
    |

    நல்ல வார்த்தையானாலும் சரி, கெட்ட வார்த்தையானாலும் சரி, ஜாலி வார்த்தையானாலும் சரி.. தமிழ்ல்லதாங்க எக்குத்தப்பாக இருக்கிறது.

    மானமிகு, மாண்புமிகு... இதற்கு இணையான பிற மொழி வார்த்தைகள் அந்த அளவுக்கு ஸ்டிராங்காக இருக்குமா என்று தெரியவில்லை. கிறுக்குப் பயலே.. கேணப்பயலே.. இப்படியெல்லாம் படு கீழான வார்த்தைகள் பிற மொழியில் இந்த அளவுக்கு ஈர்ப்போடு இருக்குமா என்றும் தெரியவில்லை.

    நிஜ வாழ்க்கையில் நாம் பேசும் வார்த்தைகளை விட தமிழ் சினிமாக்களில்தான் இதுபோன்ற உயர்வு மற்றும் தாழ்வு வார்த்தைகளை நிறையப் பயன்படுத்தி வந்தனர் - வருகின்றனர்.

    ஏய்...மிஸ்டர்

    ஏய்...மிஸ்டர்

    அந்தக் காலத்தில் அதாவது சரோஜாதேவி காலத்தில் எல்லாம் சினிமாக்களில் காதலர்களைக் கூட கலெக்டர் ரேஞ்சுக்குத்தான் ஹீரோயின்கள் கவுரமாக கூப்பிடுவார்கள். மிஸ்டர் போடாமல் யாரையும் விளிக்கவே மாட்டார்கள்... அந்தப் படங்களைப் பார்த்து நாம் இன்று ஆச்சரியத்தில் விழித்துக் கொண்டிருக்கிறோம்.

    மிஸ்.. நான் உங்களை லவ் பண்றேன்

    மிஸ்.. நான் உங்களை லவ் பண்றேன்

    அதே போலத்தான் ஹீரோக்களும் ரொம்பக் கெளரவமாக கோட் சூட், டை எல்லாம் போட்டுக் கொண்டு, நீட்டாக ஷேவ் செய்து கொண்டு படு டீக்காக காதலியரிடம் காதலைக் கக்குவார்கள்.. அதுவும் மிஸ் போட்டுக் கொண்டு. மிஸ் சொல்லாமல் எந்த ஹீரோவும் அந்தக் காலத்துப் படங்களில் காதலித்ததே இல்லை.

    மண்டையா புகழ் கவுண்டமணி

    மண்டையா புகழ் கவுண்டமணி

    அப்படியே அந்த டிரெண்ட் பின்னாளில் மாறியது. கவுண்டமணி காலத்தில்தான் தமிழ் சினிமாவில் நிறைய தமிழ் நையாண்டி வார்த்தைகளை தமிழ் கூறும்
    நல்லுலகம் கண்டது. அவரைப் போல திட்டியவர் யாரும் கிடையாது எனலாம்..

    அடே கரிச்சட்டித் தலையா...

    அடே கரிச்சட்டித் தலையா...

    வைதேகி காத்திருந்தாள் படத்தைப் பார்த்த யாருமே வயிறு வலிக்காமல் வீட்டுக்குப் போயிருக்க முடியாது. அப்படி ஒரு அதகளம் காமெடியில் அந்தப் படத்தில் கவுண்டமணியால். நிறைய வார்த்தைகளக் கொட்டி இதில் செந்திலை அவர் வறுத்தெடுத்திருப்பார்.

    கீரிப்புள்ள தலையா..

    கீரிப்புள்ள தலையா..

    பேரிக்கா தலையா, கரிச்சட்டித் தலையா, கீரிப்புள்ள தலையா, கோமுட்டித் தலையா... இன்னும் என்னவெல்லாமோ சொல்லி சுழற்றியடித்திருப்பார் கவுண்டர்.

    நாதாரி.. நன்னாரி...

    நாதாரி.. நன்னாரி...

    அதன் பிறகு வந்த வடிவேலு கிட்டத்தட்ட கவுண்டமணியின் சில ஸ்டைல்களைக் காப்பியடிக்கத் தவறவில்லை. ஏகவசனத்தில் கொஞ்சம் மாற்றம் இருந்தாலும் கவுண்டமணி மாதிரியே இவரும் நிறைய வார்த்தைளை அறிமுகப்படுத்தினார். அதில் முக்கியாமனது - அட நன்னாரிப் பயலே...

    டுபுக்கு - உடுக்கு...

    டுபுக்கு - உடுக்கு...

    டுபுக்கு, உடுக்கு, போடா என் பிஸ்கோத்து கப்பித்தனம், அவனா நீ, போடாங்கோ, என பல வார்த்தைகளைக் கோர்த்துக் கொடுத்து கொடி நாட்டியவர் வடிவேலு.

    சந்தானமும் அப்படித்தானே...

    சந்தானமும் அப்படித்தானே...

    பிறகு வந்தவர்களில் சந்தானம், கவுண்மணியைக் காப்பியடிக்க ஆரம்பித்தார். அடே செல்போன் மண்டையா என்று ஆரம்பித்து நிறைய வார்த்தைகளை இவரும் கண்டுபிடித்து கடையை விரித்துள்ளார்.

    நீ கரெக்ட் பண்ற பொண்ணை விட

    நீ கரெக்ட் பண்ற பொண்ணை விட

    சந்தானத்தின் ஸ்டிராங்கான வசனங்களில் சில... நீ கரக்ட் பண்ற பொண்ண விட, உன்ன கரக்ட் பண்ணுற பொண்ணுதான் ஒர்க் அவுட் ஆகும். ஏரி உடைஞ்சா மீனு ஏரியாவுக்கு வந்துதானே ஆகணும். டேய்... நான் மொடாக் குடிகாரனுவ கூட சேர்ந்துக் குடிப்பேன். ஆனா மோந்துப் பாக்குறவன் கூடெல்லாம் குடிக்க மாட்டேன். ஏண்டா, சரக்குல ஆ.'.ப் போட முடியலுனு பேசுறதுல ஆ.'.ப் போட்டு பேசுறியா.

    இப்ப பக்கியில வந்து நிக்குது...

    இப்ப பக்கியில வந்து நிக்குது...

    இந்த வரிசையில் இப்போது சூர்யாவும் கூட சேர்ந்துள்ளார். சிங்கம் 2 படத்தில் அவர் பேசிய பக்கி என்ற வசனம் இப்போது பக்கிகள்.. அதாவது கல்லூரிப் பசங்க மத்தியில் செம ஹிட்... யாரையாச்சும் திட்றதா இருந்தா பக்கின்னுதான் பாசமா கூப்பிடுறாங்களாம்...

    இன்னும் நம்மை என்னவெல்லாம் செய்யப் போகிறார்களோ...!

    English summary
    Here are some of the famous trend setting dialogues of Tamil comedian.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X