சிவகார்த்திகேயன் வராமல் சதீஷ் திருமணமா.. பிரபலங்கள் வாழ்த்து மழையில் நடந்த நடிகர் சதீஷ் திருமணம்!

Recommended Video

Breaking! Comedy Actor Sathish Engagement VIDEO

சென்னை: தமிழ் சினிமாவில் காமெடியில் கலக்கி வரும் நடிகர் சதீஷ் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

வைபவ் நடிப்பில் வெளியான சிக்சர் படத்தின் இயக்குநர் சாச்சியின் தங்கை சிந்துவைத் தான் சதீஷ் திருமணம் செய்துள்ளார்.

நேற்று மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், சதீஷின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன் மற்றும் முன்னணி நடிகர்களான விஜய்சேதுபதி, ஜீவா, உதயநிதி ஸ்டாலின் என பலரும் கலந்து கொண்டு சதீஷ் மற்றும் சிந்துவை வாழ்த்தினர்.

சதீஷ் - சிந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களின் புகைப்படங்கள் மற்றும் SathishWedsSindhu என்ற ஹாஷ்டேகும் டிரெண்டாகி வருகிறது.

காதல் திருமணமா?

வைபவ் நடித்த சிக்ஸர் படத்தின் இயக்குநர் சாச்சியின் தங்கையை சதீஷ் திருமணம் செய்துள்ளதால், இந்த திருமணம் காதல் திருமணமா என்ற சந்தேகம் கிளம்பியது. ஏனென்றால், சிக்ஸர் படத்தில் வைபவ்வின் நண்பனாக சதீஷும் நடித்திருந்தார். ஆனால், இது முழுக்க முழுக்க பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என இயக்குநர் சாச்சி தனது ட்விட்டர் பக்கத்தில் முன்னதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனின் அறிமுக படமான மெரினா படத்தில் இருந்தே அவருடன் சதீஷ் நடித்து வருகிறார். தன்னுடைய நெருங்கிய நண்பரான சதீஷுக்கு தன்னுடைய பல படங்களில் வாய்ப்பளித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் சதீஷின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்களால் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

விஜய்சேதுபதி

காமெடி நடிகர் சதீஷின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய்சேதுபதி கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஜீவா

காமெடி நடிகர் சதீஷின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

உதயநிதி ஸ்டாலின்

காமெடி நடிகர் சதீஷ் - சிந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

கலைப்புலி எஸ். தாணு

ரஜினியின் கபாலி படத்தை தயாரித்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு காமெடி நடிகர் சதீஷ் - சிந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

கெளதம் கார்த்திக்

காமெடி நடிகர் சதீஷ் - சிந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் கெளதம் கார்த்திக் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

ஏ.ஆர். முருகதாஸ்

தளபதி விஜய்யுடன் கத்தி படத்தில் நடித்த சதீஷை அந்த படத்தின் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தனது குடும்பத்துடன் வந்து வாழ்த்திச் சென்றார். மேலும், பல நடிகர்கள், நடிகைகள் பிரபலங்கள் சதீஷின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X