ரஜினி, கமல் பட நடிகை பிந்து கோஷ் மரணம்... அதிர்ச்சியில் உறைந்த சினிமா பிரபலங்கள்!

சென்னை: தமிழ் சினிமாவில் 80களில் கோவை சரளா, மனோரமா ஆகியோரை போன்று காமெடியில் கலக்கியவர் தான் பிந்துகோஷ். 100 படங்களுக்கும் நடித்திருக்கும் இவர் வயது மூப்பின் காரணமாக மருத்துவமனையில் அனமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வறுமை: பிபி சுகர் மட்டுமல்லாமல் ஹார்ட் ஆபரேஷன் கூட செய்து இருக்கிறார். தற்போது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு கூட இவர் பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறார். 80களில் காமெடியில் கலக்கிய பிந்துகோஷ் கார், சொந்த வீடு என சகல வசதியுடன் தான் வாழ்ந்து வந்துள்ளார். பட வாய்ப்புகள் குறைய வாழ்வில் வறுமை ஒட்டிக்கொண்டது. வறுமையின் காரணமாக சொத்துக்களை விற்கும் நிலைக்கு வந்துவிட்டார். தற்போது வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத அளவுக்கு இவர் கஷ்டப்பட்டு வருகிறார். தற்போது ஒரு பேட்டியில் தனது நிலை குறித்து வேதனையுடன் தெரிவித்தார். நலிந்த கலைஞர்களுக்கு அரசு சார்பில் உதவி செய்யுமாறு தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார்.

tamil-comedy-actress-bindhu-gosh-passed-away

விஷால் உதவி: நடிகர் விஷால் பிந்து கோஷின் நிலை அறிந்து மருத்துவ உதவிக்கு பணம் கொடுத்திருக்கிறார். இதையும் பிந்து கோஷ் பேட்டியில் தெரிவித்தார். மேலும், மருத்துவ செலவிற்கு ரூ.5 லட்சம் கேட்டிருந்தார். இதேபோன்று பலரும் தனக்கு உதவி செய்ததாக அவரே தெரிவித்திருந்தார். சமீபத்தில் KPY பாலா ஷகிலாவுடன் வந்து நேரில் பிந்துகோஷின் உடல்நலம் குறித்து விசாரித்து தன்னால் முடிந்த உதவியை செய்திருந்தார். இதுகுறித்த செய்திகளும் வெளியாகின.

வாடகை பிரச்னை: நான் சினிமாவில் நடித்து சம்பாதித்துக் கொண்டிருந்தேன் அப்போது ஒரு படத்திற்கு ஆயிரம் முதல் 3000 ரூபாய் வரை வரும். நான் சம்பாதித்த பணத்தை வைத்துத்தான் சொந்தமாக வீடு கட்டினேன். அப்போது அனைவரும் என்னை நன்றாக பார்த்துக் கொண்டனர். பின்பு எனது உடல்நிலை மிகவும் மோசமானது. அந்த நேரத்தில் வீட்டில் ஒரு சண்டை வந்தது அதன் பிறகு அனைவரும் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்கள். எனக்கென்று யாரும் இல்லாதபோது நாந் வீட்டை விற்றுவிட்டேன். தற்போது நான் இருக்கும் வாடகை வீட்டிற்கு ரூ.7,000 கொடுக்கிறேன். ஆ னாலும் வாடகை பணம் கூட கொடுக்க முடியாமல் மிகவும் கஸ்டப்படுகிறேன். எனக்கென்று உதவ யாரும் இல்லை. உடம்பிலும் சக்தி இல்லை என கண்ணீருடன் பிந்து கோஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

பண உதவி: பிந்துகோஷின் இரண்டாவது மகன் தன்னை கவனித்து வருவதாகவும், அவனுக்கும் போதிய வருமானம் இல்லை என்றும் தெரிவித்தார். யார் யாரிடமோ உதவி கேட்டோம், எந்த பயனும் இல்லை. என்னை கவனித்துக்கொள்ளவே எனது மகனும் மிகவும் சிரமப்படுகிறான். சில வருடத்திற்கு முன்பு விஷால், லாரன்ஸ் ஆகிய 2 பேரும் மட்டுமே உதவி செய்ததாக பிந்து கோஷ் தெரிவித்தார். அதன் பிறகு யாரும் இல்லை என்றார்.

tamil-comedy-actress-bindhu-gosh-passed-away

மரணம்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 76 வயதான பிந்து கோஷ் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மக்களை சிரிப்பில் ஆழ்த்திய கலைஞர் மறைவில் மறைந்திருப்பது வருத்தத்தை தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Read more about: tamil cinema comedy bollywood death
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X