தமிழில் ஒரு புத்தம் புதிய ஓடிடி டிஜிட்டல் தளம் ... பிலெக்ஸிடா இது ஃப்ரீடா !
சென்னை : Flixdaa தமிழில் புதிதாக துவங்கப்பட்டிருக்கும் இணைய வீடியோ ஓடிடி தளம். எண்ணற்ற புதிய தமிழ் வீடியோக்கள் இந்த தளத்தில் உள்ளது. உலகத்தரமான சீரிஸ்கள், திரைப்படங்கள், குறும்படங்கள், ஸ்டேண்டப் காமெடி எனும் இடைவிடாத நகைச்சுவை நிகழ்ச்சி, இசை ஆல்பங்கள், குறு நகைச்சுவை துணுக்கு வீடியோக்கள், சமையல் வீடியோக்கள் என கணக்கிலடங்கா எண்ணற்ற வீடியோக்களை கொண்டிருக்கிறது இந்த புதிய தளம்.
இணையத்தின் எந்த ஒரு இயங்குதளத்தின் மூலமும் www.flixdaa.com முகவரி வழியே இந்த தளத்தை காணலாம். அல்லது மொபைல் வழியே ஆண்ட்ராய்ட் ஆப் மற்றும் தொலைக்காட்சி/ Amazon Fire Tv ஆப் மூலமும் காணலாம்.
முற்றிலும் புதுமைகளை புகுத்தியுள்ள இந்த புதிய தளம் உலகம் முழுதுமான இந்திய ரசிகர்களுக்கும் சுயாதீன கலைஞர்களுக்கு ஏற்றதொரு தளமாக இயங்கும் என்று சொல்ல படுகிறது

அனுபவம்
பல நாடுகள் இன்னும் பொதுமுடக்கத்தில் இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் பார்த்த இணைய தொடர்கள் மற்றும் படங்கள் மூலம் சலிப்படைந்துள்ள பார்வையாளர்களுக்கு பிலிக்ஸ்டா ஒரு அற்புதமான புதிய அனுபவத்தை வழங்கும் என்று சொல்ல படுகிறது

பொழுதுபோக்கு
எண்ணிலடங்கா புதிய கதைகளை பார்க்கலாம் என்றும் , இந்த கொரானா சூழலில் வீட்டிலிருந்தபடியே , பாதுகாப்பாக இருந்து புத்தம் புதிய தமிழ் தொடர்கள், திரைப்படங்களை கண்டுகளிக்கலாம் . இத்தளத்தில் உள்ள நிகழ்ச்சிகள், தொடர்கள், படங்கள் இந்த தளத்தில் மட்டுமே ப்ரத்யேகமாக கிடைக்க கூடியவை. வேறு எந்த ஒரு தளத்திலும் அதனை காண முடியாது. கிட்டதட்ட இத்தளத்திலுள்ள அனைத்துமே வேறெங்குமே கண்டிராத புதிதான கதைகளே. மொபைலில் வீட்டில் இடம்பிடிக்கும் அடுத்த மிகப்பெரும் பொழுதுபோக்கு ஆப் ஆக இருக்கும் என்று நம்பப்படுகிறது

இலவசம்
இந்த தளத்தை முழுதும் இலவசமாகவே அணுகலாம். இத்தளத்தில் உங்கள் மெயில் ஐடியை பகிர்ந்து உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ரகசிய குறியீட்டு எண்ணை உள்ளிடுவதன் மூலம் நீங்கள் முழுமையாக இத்தளத்தை இலவசமாக அணுகலாம். இத்தளத்தின் அனைத்து தொடர்கள், திரைப்படங்கள் அனைத்தும் இலவசமே.

குழந்தைகள்
இத்தளத்தில் அனைத்து வயதினருக்கும் ஏற்ற நிகழ்ச்சிகள் உள்ளன. அதே நேரத்தில் மற்ற ஓடிடி தளங்களில் வயது வரம்பு கடைப்பிடிக்கப்படுவது போலவே இதிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் இதில் ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது , இத்தளத்தில் குழந்தைகளுக்கென்றே உருவாக்கப்பட்ட புதிய நிகழ்ச்சிகள், தொடர்கள் ப்ரத்யேகமான விளையாட்டு நிகழ்ச்சிகள் இருக்கிறது.

தரவிறக்க வசதி
விருப்பமான, பிரபலங்களின் நேரடி நிகழ்ச்சிகளை மிகவிரைவில் Flixdaa Live வழியே நேரடியாவே காணலாம். தற்போது Google play store, Android Tv, Fire Tv, Apple store ஆகியவற்றில் கிடைக்கிறது. தரவிறக்க வசதியுடன் இணையமற்ற நேரத்தில் கண்டுகளிக்கும் வசதியும் இதில் உள்ளது. எனவே இப்போது எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பொழுதை கழிக்கலாம். Flixdaa is FREEdaa என்று இந்த குழு விளம்பரப்படுத்தி பல ரசிகர்களை கவர்ந்து வருகிறது

பிலிக்ஸ்டா வெற்றி பெறும்
அமேசான், நெட்பிலிக்ஸ் , ஹாட்ஸ்டார் போன்ற ஜாம்பவான்களுக்கு மிக உறுதியான போட்டி கொடுக்கும் பல புதிய முயற்சிகள் வந்து கொண்டு இருக்கிறது. ஆந்திராவில் ஆஹா என்ற ஓடிடி தளம் வெற்றி அடைந்து மெதுவாக மார்க்கெட்டை பிடித்து கொண்டு இருக்கிறது. அது போல் இந்த பிலிக்ஸ்டா தளமும் வெற்றி பெறும் என்று நம்புவோம்.


Click it and Unblock the Notifications











