அல்லு அர்ஜுன் உடன் கூட்டணி அமைக்கும் அட்லி.. உருவாகிறதா பிரம்மாண்ட கூட்டணி!
சென்னை: தமிழில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் அட்லி
Recommended Video
இதுவரை தமிழில் மட்டுமே படங்களில் இயக்கி வந்த அட்லி இப்பொழுது பாலிவுட்டில் கால் தடத்தை பதித்து ஷாருக்கான் படத்தை இயக்கி வருகிறார்
இந்த நிலையில் அடுத்ததாக அட்லி அல்லு அர்ஜுனுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஹாட்ரிக் வெற்றிகள்
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து இப்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் அட்லி. விஜய் நடிப்பில் வெளியான தெறி,மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்த இவருக்கு இப்பொழுது பாலிவுட்டிலும் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான அட்லி தெறி படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றி கண்டார் அதை தொடர்ந்து மெர்சல் திரைப்படம் மீண்டும் விஜய் கூட்டணியில் உருவாகி இந்த படமும் மெர்சலான வெற்றியை பெற்றது.

பாலிவுட்டிலும் என்ட்ரி
இந்த நிலையில் மூன்றாவது முறையாக இருவரும் இணைந்த பிகில் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று பாக்ஸ் ஆபீசை அசைத்துப் பார்த்தது இந்த நிலையில் இந்த கூட்டணி நான்காவது முறையாக இணைவதற்கு சற்று காலதாமதம் ஆகும் என்பதால் இப்பொழுது பாலிவுட்டிலும் அட்லி என்ட்ரி கொடுக்க உள்ளார். அந்த வகையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் புதிய திரைப்படத்தை அட்லி இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

சூப்பர் டூப்பர் வெற்றி
ஷாருக்கான், அட்லியின் திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் சூழலில் பாலிவுட்டிலும் அட்லியின் புகழ் கூடிக்கொண்டே போகிறது இந்த நிலையில் அட்லி அடுத்து இயக்கும் புதிய படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது.

பிரம்மாண்ட கூட்டணி
தொடர்ந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த புஷ்பா திரைப்படம் 300 கோடியை கடந்து வசூல் சாதனையை படைத்து செய்து வருகிறது புஷ்பா இரண்டாவது பாகம் மிக விரைவில் வெளியாக உள்ளது. இந்தநிலையில் அல்லு அர்ஜுனுக்கு அட்லி கதை கூறியதாகவும் அந்த கதை அல்லு அர்ஜுனுக்கு பிடித்துவிட்டதாகவும் மிக விரைவிலேயே இருவரும் இணைந்து பிரம்மாண்ட கூட்டணியில் புதிய திரைப்படம் தயாராக உள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. அப்படி உருவானால் இந்த படமும் பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.


Click it and Unblock the Notifications











