தமிழ் கைவிட்டாலும் இந்தி கைவிடல... 'மாத்தி யோசி'த்த இயக்குனர்!
சென்னை: தமிழ் சினிமா கைவிட்டாலும் இந்தி சினிமா கைவிடவில்லை என்று சொன்னார், இயக்குனர் நந்தா பெரியசாமி.
ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி, ஜிகினா படங்களை இயக்கியவர் நந்தா பெரியசாமி. இவர், மாயாண்டி குடும்பத்தார், யோகி, மிளகா, கோரிப்பாளையம், சண்டக் கோழி 2 உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

இவர் இந்தி படத்துக்கு கதை எழுதியுள்ளார். ராஷ்மி ராக்கெட் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் டாப்ஸி ஹீரோயினாக நடிக்கிறார். ஆதர்ஷ் குரானா இயக்குகிறார். ரோனி ஸ்கிரிவாலா தயாரிக்கிறார். தடகள வீராங்கனையை பற்றிய இந்தப் படத்துக்காகத் தோற்றத்தை மாற்றுகிறார் டாப்ஸி.

படம் பற்றி நந்தா பெரியசாமி கூறும்போது, தடகளப் போட்டிகளில் சாதனை செய்த ஒரு பெண்ணின் வாழ்க்கைக் கதை இது. உண்மைக் கதைதான் என்றாலும் சினிமாவுக்கு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அந்த வீராங்கனை யார் என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ்.
தமிழ் சினிமா, என்னை கைவிட்டுவிட்டது. இதனால் இந்திக்குச் சென்றேன். இந்தி என் கைப்பற்றிக்கொண்டது. இந்தப் படத்தை அடுத்து மீண்டும் ஒரு இந்தி படத்துக்கு கதை கேட்டிருக்கிறார்கள். தமிழில் படம் இயக்கவும் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது என்றார்.


Click it and Unblock the Notifications











