twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நயனுக்கு தான் ஒர்க்கவுட் ஆகல.. ஆண்ட்ரியாவுக்கு அதிர்ஷ்டம் இருக்கா பார்க்கலாம்!

    நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தன்னை பயன்படுத்த தமிழ் இயக்குனர்கள் தவறிவிட்டதாக நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.

    |

    Recommended Video

    மாளிகை படத்தில் முதன்முறையாக இரட்டை வேடங்களில் ஆண்ட்ரியா- வீடியோ

    சென்னை: மாளிகை படத்தில் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா.

    தில் சத்யா இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள படம் மாளிகை. இப்படத்தில் முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா. இப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், விஜய் ஆண்டனி, ஆண்ட்ரியா, இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய ஆண்ட்ரியா, தன்னை வைத்து நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை எடுக்க தமிழ் இயக்குனர்கள் தவறிவிட்டதாகக் கூறினார்.

     தப்பு, அட்லியின் நிறத்தை கிண்டல் செய்வது ரொம்பத் தப்பு தப்பு, அட்லியின் நிறத்தை கிண்டல் செய்வது ரொம்பத் தப்பு

    முதலில் கன்னடப் படம்

    முதலில் கன்னடப் படம்

    இதுதொடர்பாக அவர் பேசியதாவது, "மாளிகை படத்தின் கதையை முதலில் என்னிடம் சொன்ன போது, கன்னடத்தில் தான் அதை எடுக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் எனக்கு தமிழில் தான் மார்க்கெட் உள்ளது என்பதை அறிந்து தமிழில் எடுத்தனர்.

    மிஸ்ஸாகிவிட்டது

    மிஸ்ஸாகிவிட்டது

    மும்பையை சேர்ந்த தயாரிப்பாளருக்கும், கர்நாடகாவை சேர்ந்த இயக்குனருக்கும் அது தெரிந்திருக்கிறது. ஆனால் தமிழ் இயக்குனர்கள் ஏன் அதை மிஸ் செய்தார்கள் என தெரியவில்லை. எங்கேயோ மிஸ்ஸாகிவிட்டது.

    முதல்முறையாக இரட்டை வேடம்

    முதல்முறையாக இரட்டை வேடம்

    இந்த படத்தில் நான் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளேன். ஆக்ஷ்ன், ரொமான்ஸ் என எல்லாமே செய்துள்ளேன். இது ஒரு வரலாற்று படம். எனவே இதில் நடிப்பது சுவாரஸ்யமாக இருந்தது.

    ரசிகர்கள் ரசிப்பார்கள்

    இந்த படம் ரசிகர்களை மனதில் வைத்து எடுக்கப்பட்டுள்ளது. எனவே ரசிகர்கள் இதனை நிச்சயம் ரசித்து மகிழ்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    English summary
    While speaking in the teaser launch event of Maligai, actress Andrea said that tamil directors somehow missed her for female centric films.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X