‘மகான்‘ படத்தின் கதை இதுதான்… நேரடியாக ஒடிடியில்… ரிலீஸ் தேதி அறிவிப்பு !
சென்னை : சியான் விக்ரம் நடிக்கும் மகான் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.
இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஷ்ரேயஸ் கிருஷ்ணா, இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், எடிட்டராக விவேக் ஹர்ஷன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
மகான் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருந்த நிலையில் சில காரணங்களால் அவர் இதிலிருந்து விலக, சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மகான்
விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா போன்ற பல நடிகர் பட்டாளம் நடித்திருக்கும் படம் மகான். விக்ரமும் அவருடைய மகன் துருவும் இணைந்து நடித்திருப்பதாலே படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது. பீசா, ஜிகர்தண்டா, பேட்ட போன்ற பல படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தை இயக்கி உள்ளார்.

ஓடிடியில்
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மகான் திரைப்படம் பிப்ரவரி 10ந் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதுதான் கதை
தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் மகான் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் கதை குறித்து அமேசான் நிறுவனம் அறிக்கை அளித்துள்ளது. அதில், விக்ரம் தனிமனித சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து குடும்ப வாழ்க்கையிலிருந்து விலகி பிரிந்து விடுகிறார். தனது லட்சியத்தை அடைந்து கோடீஸ்வரனாகி விடுகிவார். தனது கனவு நனவானாலும், மகன் அருகில் இல்லாததால் வாழ்க்கை வெறுமையாகி விடுகிறது. இந்த அதிரடியான பயணத்தில் எதிர்பாராத தொடர் நிகழ்வுகளின் காரணமாக அவரது வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது என்பதே இந்த படத்தின் கதை என கூறப்பட்டுள்ளது.

ஆக்ஷன் திரைப்படம்
ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த கேங்ஸ்டார் திரைப்படமாக உருவாகி உள்ள மகான் திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. கடந்த சில தினங்களாகவே இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் படக்குழு இதுக்குறித்து எதுவும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்த நிலையில், இப்படம் OTTயில் வெளியாகிறது என்ற அறிவிப்பை அமேசான் அன்று வெளியிட்டது.


Click it and Unblock the Notifications











