பொன்னியின் செல்வன் படத்துக்கு கிளம்பிய எதிர்ப்பு.. ராஜமெளலி படங்களுக்கு இனி இங்கே ஆதரவு கிடைக்குமா?

சென்னை: பாகுபலி படத்தை தமிழ் சினிமாவை போலவே நினைத்து இங்கே உள்ள ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தமிழ் படங்களை விட அதிக கலெக்‌ஷனையும் இங்கே பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் படங்கள் தட்டித் தூக்கின.

ஆனால், டோலிவுட்டில் பாகுபலி படத்துடன் கம்பேர் செய்து ஏகப்பட்ட ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் நெகட்டிவிட்டியை பரப்பி வருவது வருங்காலத்தில் ராஜமெளலியின் படங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.

இணையில்லா இயக்குநர்

இணையில்லா இயக்குநர்

டோலிவுட்டை உலக அரங்கில் கொண்டு வந்த பெருமைக்குரியவர் இயக்குநர் ராஜமெளலி. நான் ஈ, மாவீரன் படங்களின் மூலமாகவே தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் கவர்ந்த ராஜமெளலி பாகுபலி 1 மற்றும் 2 பாகங்கள் மூலமாக உலகளவில் ரசிகர்களை கவர்ந்தார். ஆர்ஆர்ஆர் படத்தை ஹாலிவுட் ரசிகர்கள் அப்படி வாய் பிளந்து பார்த்து பாராட்டி வரும் அளவுக்கு மேக்கிங்கில் தான் ஒரு கிங் என நிரூபித்துக் காட்டி உள்ளார்.

பாகுபலிக்கு வரவேற்பு

பாகுபலிக்கு வரவேற்பு

தமிழ்நாட்டில் பாகுபலி படத்தை திருவிழாவாக தினம் தோறும் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று கண்டதை அனைத்து கோலிவுட் பிரபலங்களுமே ஆச்சர்யத்துடன் பார்த்தனர். இயக்குநர் ராஜமெளலியின் படங்கள் வெளியான உடனே ஏகப்பட்ட தமிழ் சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி அவரது படங்களை பாராட்டி உள்ளனர்.

ரசிகர்கள் சண்டை

ரசிகர்கள் சண்டை

தெலுங்கு படம் என்றோ தெலுங்கு இயக்குநர் என்றோ தமிழ் சினிமா ரசிகர்கள் ஒருபோதும் பிரித்து பார்த்ததே கிடையாது. ஆனால், பொன்னியின் செல்வன் படம் வெளியான நிலையில், பாகுபலி தான் சிறந்த படம் என டோலிவுட் ரசிகர்கள் டிரெண்ட் செய்து சண்டையை ஸ்டார்ட் பண்ணி உள்ள நிலையில், டோலிவுட்டில் பெரிய அளவில் வசூல் வேட்டையை பொன்னியின் செல்வன் நடத்த முடியாமல் தவித்து வருகிறது.

தமிழ் ரசிகர்கள் கோபம்

தமிழ் ரசிகர்கள் கோபம்

டோலிவுட் ரசிகர்கள் தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனம் கொடுத்து வருவதை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள் ராஜமெளலி இயக்கிய பாகுபலி படமே ஹாலிவுட் படங்களின் அட்டக் காப்பி என்றும் பொன்னியின் செல்வன் கதையை திருடி காட்சிகளை அமைத்து விட்டு அவங்க அப்பா எழுதுன கதை என அளந்து விட்டுள்ளார் என பதிலடி கொடுத்து வருகின்றனர்.

யானையை தூக்கி சுத்தனுமா

யானையை தூக்கி சுத்தனுமா

ஆர்ஆர்ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர் பைக்கை தூக்கி சுற்றி அடித்தது. புலி, சிங்கம், மான் என அனைத்து மிருகங்களையும் ஒரே கூண்டுக்குள் வைத்துக் கொண்டு எப்படி வந்து சண்டை போடுகிறார் என லாஜிக் ஓட்டைகளை வரிந்து கட்டி விளாசி வருகின்றனர். மேலும், ஆதித்த கரிகாலன் யானையை தூக்கி சுத்தியிருந்தா படம் மாஸா இருந்துருக்கும் என வீடியோ மீம்களையும் போட்டுத் தாக்கி வருகின்றனர்.

ராஜமெளலி படம் இனி இங்க ஓடுமா

ராஜமெளலி படம் இனி இங்க ஓடுமா

டோலிவுட் ரசிகர்கள் கக்கிய வன்மத்திற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் பாய்காட் பாலிவுட் போல பாய்காட் டோலிவுட் என்பதை ஆரம்பித்து விட்டார்கள் என்றால், ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கப் போகும் புதிய படத்திற்கு இங்கே வரவேற்பு கிடைக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இப்பவே ராஜமெளலி படங்களை விமர்சிக்கத் தொடங்கிய நிலையில், படம் வரட்டும் நாங்களும் வச்சி செய்றோம் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

சினிமா அரசியல்

சினிமா அரசியல்

சினிமாவை சினிமாவாக பார்த்து கொண்டாடாமல் பாக்ஸ் ஆபிஸ் அரசியலாக மாற்றி விட்டு விஜய், அஜித், சூர்யா படங்கள் என உள்ளூரிலும் தமிழ் சினிமா, தெலுங்கு சினிமா என பக்கத்து ஸ்டேட்டுகளிலும் சண்டை போட்டு வந்தால், எப்போ நாமும் ஹாலிவுட் போல உலகளவில் படங்களை வெளியிட்டு மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்குவது என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

கோலிவுட் டாப் நடிகர் நடித்தால்

கோலிவுட் டாப் நடிகர் நடித்தால்

இயக்குநர் ராஜமெளலி மகேஷ் பாபுவை வைத்து அடுத்து இயக்கப் போகும் படத்திற்கு ஹீரோயினாக பாலிவுட் நடிகை ஆலியா பட்டை ஆன்போர்ட் செய்யப்போவதாகவும் ஏகப்பட்ட ஹாலிவுட் நடிகர்களை களமிறக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், கோலிவுட்டில் இருந்து டாப் நடிகர் ஒருவரை படத்தில் கேமியோவாக கொண்டு வந்தாலே ரசிகர்கள் சண்டை காணாமல் போய் அந்த படத்தை கொண்டாடுவார்கள் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X