தனிக்குடித்தனம் போன "தட்ஸ்தமிழ் சினிமா"... இனி தமிழ் "பிலிமிபீட்"!
சென்னை: உங்கள் தமிழ். ஒன்இந்தியாவின் சினிமா பகுதி தமிழ் பிலிமிபீட் என்ற பெயரில் தனி இணையத்தளமாக பிரிந்துள்ளது. தமிழ் ஒன்இந்தியாவின் சினிமா செய்திகளை இனி இந்தப் புதிய தளத்தில் பார்த்து மகிழலாம்.
இதுவரை தமிழ் ஒன்இந்தியாவின் அங்கமாக இருந்து வந்தது சினிமா செய்திகள். தற்போது மேலும் பரந்து விரிந்த சேவையை வழங்கும் வகையில், விசாலமான புதிய தனி தளமாக அது மாற்றப்பட்டுள்ளது.

தமிழ் ஒன்இந்தியா சினிமாப் பிரிவில் இடம் பெற்ற செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள், கிசுகிக்கள் உள்ளிட்ட அனைத்தும் இனி அதிக விறுவிறுப்புடன் அதிரடியாக புதிய தளத்தில் காணக் கிடைக்கும்.
அதேசமயம், தமிழ் ஒன்இந்தியாவின் தளத்திலும் பிலிமிபீட் தளத்தின் இணைப்புகள் தொடர்ந்து இடம் பெற்றிருக்கும்.
இதனால் ஒன் இந்தியா தமிழிலேயே தொடர்ந்து சினிமா செய்திகளை பார்க்க முடியும்.
புதிய தளத்திற்கும் உங்களது ஆதரவு எப்போதும் போல தொடரும் என்ற நம்பிக்கையுடன்.. எங்களது பயணம் தொடர்கிறது...


Click it and Unblock the Notifications











