காலியான பெரிய படங்கள்.. நீதிமன்றத்தில் நிற்கும் தயாரிப்பாளர் சங்கம்.. ஒரு முடிவோடதான் இருக்காங்க போல

சென்னை: தமிழ் சினிமாவை நேரடியாகச் சார்ந்தும், மறைமுகமாகச் சார்ந்தும் பயன் அடைபவர்களின் எண்ணிக்கை என்பது கணிசமான அளவு உள்ளது. இதில் சினிமா விமர்சகர்கள் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கின்றனர். முதலில் சினிமா விமர்சகர்கள் மட்டுமே இருந்த நிலையில், இணையம் வளர்ந்த பின்னர், பல யூடூயூப் சேனல்கள் ரசிகர்களின் விமர்சனத்தை பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்து வந்தனர். இதனைத் தொடக்கத்தில் ஊக்குவித்ததே படக்குழுவினர்தான். இப்படியான நிலையில், தற்போது தமிழ்நாடு ஆக்டிவ் தயாரிப்பாளர் சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் பெட்டிஷன் ஒன்றை சமர்பித்துள்ளனர். இது தொடர்பாக இந்தத் தொகுப்பில் காணலாம்.

கடந்த சில வருடங்களாக ஒரு படத்தின் வெற்றி என்பது, படத்தின் வசூலை மையப்படுத்தி உருவாகிவிட்டது. ஒரு ஆண்டுக்கு 100க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் ஆவதால் திரையுலகம் மிகவும் போட்டி நிறைந்த உலகமாக மாறிவிட்டது. ஒரு மாதத்தில் குறைந்தது இரண்டு மூன்று பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகிவிடுகின்றது. இதுமட்டும் இல்லாமல், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தும் படங்களும் ரிலீஸ் ஆகிவிடுகின்றது.

madras high court

இப்படியான நிலையில் ஒரு படம் வெளியாகி ஒரு மாதத்தில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டுவிடுவதால், படம் ஒரு மாதம் வரை திரையில் ஓடி அதற்குள் எவ்வளவு வசூல் குவிக்கின்றது என்பதுதான் படத்தின் லாப நஷ்டத்தை அதாவது வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றது. இப்படியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் ஒரு படத்தினை பார்க்க வைக்க, தயாரிப்பு நிறுவனம் குட்டிக்கரணமே அடிக்கின்றார்கள் என்றுதான் கூறவேண்டும். ஆனால் ரசிகர்கள் சம காலங்களில் சில விமர்சகர்களின் விமர்சனத்தை பார்த்துவிட்டு படத்தினை பார்க்கலாமா வேண்டாமா என முடிவு செய்துகொள்கின்றனர்.

ரிட் மனு: விமர்சகர்கள், யூடியூப் தளத்தினைச் சேர்ந்தவர்கள் ரசிகர்களின் மத்தியில் பெரும் தாக்த்தினை ஏற்படுத்துகின்றார்கள். இது மட்டும் இல்லாமல் ரசிகர்களே படத்தினைப் பார்த்த பின்னர், தங்களது சமூக வலைதளங்களில் தங்களது விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில், தமிழ்நாடு ஆக்டிவ் தயாரிப்பாளர் சங்கத்தினைச் சேர்ந்தவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைச் சமர்பித்துள்ளனர். அதில், ஒரு படம் ரிலீஸ் ஆன பின்னர், மூன்று நாட்களுக்குப் பின்னர்தான் படம் குறித்து விமர்சனங்களை சமூக வலைதளங்களில் ஊடகங்களில் வெளியிடவேண்டும் என உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பரபரப்பு: மேலும் விமர்சனத்தை மூன்று நாட்களுக்குப் பின்னர் தெரிவிப்பது என்பது, ஒவ்வொருவரின் கருத்துச் சுதந்திரம் பாதிக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களது இந்த மனு குறித்து திரைத்துறையில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டில் பெரிய நடிகர்களின் படங்கள் விமர்சனத்தினால் வசூல் ரீதியாக பெரிய தோல்வியைச் சந்தித்ததால்தான், தமிழ்நாடு ஆக்டிவ் தயாரிப்பார்கள் சங்கத்தின் தரப்பில் இருந்து இப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X