»   »  வீக் மாநில அரசு.... மத்திய அரசுக்கு லாலி பாடும் தமிழ் சினிமாக்காரர்கள்!

வீக் மாநில அரசு.... மத்திய அரசுக்கு லாலி பாடும் தமிழ் சினிமாக்காரர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமாக்காரர்களைப் பொறுத்த வரை யாரை அட்ஜஸ்ட் பண்ணுகிறார்களோ இல்லையோ ஆட்சியாளர்களை கூலாகவே வைத்திருக்க வேண்டும். அவர்களது ஆதரவு இருந்தால் தான் சலுகைகள் பெற முடியும். சமயத்தில் படங்களே ரிலீஸ் பண்ண முடியும்.

கடந்த ஆறு மாதங்களாக கோமா ஸ்டேஜிலேயே இருக்கிறது தமிழக அரசு.உள்கட்சி குழப்பங்களால் செயல்படவும் இல்லை. மத்திய அரசுக்கு கூழைக் கும்பிடு போட வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டு விட்டது. இந்த சூழலில் மாநில அரசை எதற்கு அணுகினாலும் சினிமாக்காரர்களுக்கு தெளிவான பதில் கூட கிடைப்பதில்லை. எனவே சினிமாக்காரர்கள் தங்கள் கவனத்தை மத்திய அரசு பக்கம் திருப்புகிறார்கள்.

Tamil film celebrities come close to BJP govt

விஷால், கமல்ஹாசன் என்று வரிசையாக மத்திய அரசுக்கு நெருக்கமாக செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். தமிழ்நாட்டில் வலுவாக காலூன்ற சினிமாக்காரர்கள்தான் குறுக்கு வழி என்பதை உணர்ந்த பாஜக அரசும் இவர்களுக்குதான் அதிக முக்கியத்துவம் தருகிறது. அடுத்து கமலுக்கு பாராட்டு விழா, என்எஃப்டிசி தலைவர் பதவி என நிறையவே எதிர்ப்பார்க்கலாம்!

ஆமாம்... விவசாயியா முக்கியம்? இவங்கதான முக்கியம். சோறு போடப் போறாங்கள்ல...!

English summary
Tamil Cinema people now approaching BJP govt for many subsidies due to inactive state govt.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil