twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இயக்குனர் பாரதி ராஜாவுக்கு இந்த வருடத்துக்கான தாதா சாகிப் பால்கே விருது.. திரைத்துறை கோரிக்கை!

    By
    |

    சென்னை: இயக்குனர் பாரதிராஜாவுக்கு இந்த வருடத்துக்கான தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்படும் என்று திரைத்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இயக்குநர் பாரதிராஜாவுக்கு இன்று 77 வது பிறந்த நாள். கொரோனா காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரில் இருக்கிறார் அவர்.

    இதையடுத்து ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

    இந்தக் கொரோனா இப்படி மாத்திடுச்சே.. வயலில் இறங்கி வசமாக நாற்று நட்ட ஹீரோயின்.. சூப்பர் அனுபவமாம்!இந்தக் கொரோனா இப்படி மாத்திடுச்சே.. வயலில் இறங்கி வசமாக நாற்று நட்ட ஹீரோயின்.. சூப்பர் அனுபவமாம்!

    சந்திக்க வேண்டாம்

    சந்திக்க வேண்டாம்

    ஆறு முறை தேசிய விருதுகளையும் இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ள பாரதிராஜா, பிறந்த நாளை முன்னிட்டு தன்னை யாரும் சந்திக்க வரவேண்டாம் என்று கூறியுள்ளார். இதுபற்றி ட்விட்டரில், யாரும் எம்மை சந்திக்க வர வேண்டாம் என சமூக பொறுப்பு உணர்ந்து தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    தாதா சாகேப் பால்கே

    தாதா சாகேப் பால்கே

    இதற்கிடையே, அவருக்கு இந்த வருடத்துக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட வேண்டும் என்று தேசிய விருது பெற்ற இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு அவர்கள் கடிதம் அனுப்பி உள்ளனர்.

    42 படங்கள் இயக்கியவர்

    42 படங்கள் இயக்கியவர்

    அதில், இன்று (17-07-2020) பிறந்தநாள் கொண்டாடும் பாரதிராஜா, தென்னிந்தியத் திரையுலகில் புதிய அலையைத் தொடங்கி வைத்தவர். 43 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி வருபவர். இந்த நன்னாளில் எங்கள் கோரிக்கையை முன் வைப்பதற்கு முன், அவர் சாதனைகளைப் பட்டியலிட விரும்புகிறோம். அவர், 1977 முதல் 2019 வரை இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் 42 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

    மகளிர் முன்னேற்றம்

    மகளிர் முன்னேற்றம்

    வேலையில்லாத் திண்டாட்டம், தீண்டாமை, சாதிய மோதல்கள், பெண் சிசுக் கொலை போன்ற சமூகக் கொடுமைகளை எதிர்க்கும் படங்களையும் இயக்கியவர். மகளிர் முன்னேற்றம் உள்ளிட்ட சமூக மாற்றத்துக்குத் தேவையான நடவடிக்கைகள், சமூக விழுமியங்கள் ஆகியவற்றை வலியுறுத்தும் படங்களையும், மனித உறவுகளை மகிமைப்படுத்தும் படங்களையும் இயக்கி, தென்னிந்தியாவின் தனிப் பெரும் இயக்குநராக விளங்குகிறார்.

    புகழ்பெற்ற நடிகர்கள்

    புகழ்பெற்ற நடிகர்கள்

    படைப்பாளிகளுக்கு உத்வேகமூட்டும் சக்தியாகவும் திகழ்கிறார். சிவாஜி கணேசன், ராஜேஷ் கன்னா, கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஸ்ரீதேவி, அமோல் பலேகர், நானா படேகர், சன்னி தியோல், சுஹாசினி மணிரத்னம், பூனம் தில்லான், ராதிகா சரத்குமார், விஜயசாந்தி, ரதி அக்னிஹோத்ரி, ரேவதி, ஜெயசுதா உள்ளிட்ட பல புகழ்பெற்ற நடிகர்களை இயக்கியவர். செட்களில் உருவாகி வந்த தமிழ் சினிமாவை கிராமங்களுக்கு எடுத்துச் சென்றவர் அவர்தான்.

    முறையான அங்கீகாரம்

    முறையான அங்கீகாரம்

    பாரதிராஜா தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த நன்னாளில் இந்திய அரசால் கௌரவிக்கப்பட்டுள்ள படைப்பாளிகளாகிய நாங்கள், இந்திய சினிமாவின் உயரிய விருதான பெருமதிப்புக்குரிய 'தாதாசாகிப் பால்கே' விருதை அவருக்கு வழங்க பரிசீலிக்க வேண்டுகிறோம். இந்திய சினிமாவில் பல சாதனைகளை நிகழ்த்திய அவருடைய மகத்தான பங்களிப்புக்கு உரிய நேரத்தில் வழங்கப்பட்ட முறையான அங்கீகாரமாக இருக்கும் என நம்புகிறோம்.

    எஸ்.பி. ஜனநாதன்

    எஸ்.பி. ஜனநாதன்

    கமல்ஹாசன், மணிரத்னம், கலைப்புலி எஸ்.தாணு, வைரமுத்து, எடிட்டர்கள் ஸ்ரீகர் பிரசாத், பீ.லெனின், எஸ்.பிரியதர்ஷன், அகத்தியன், ஞான ராஜசேகரன், ஆர்.பார்த்திபன், சேரன், கே.ஹரிஹரன், வசந்தபாலன், எஸ்.பி. ஜனநாதன், வெற்றிமாறன், சீனுராமசாமி, தனுஷ் உட்பட பலர் இந்தக் கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

    English summary
    The Tamil film industry has demanded that the Dada Sahib Phalke Award to be given to Bharathiraja this year
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X