கோச்சடையான் ரிலீஸ் தேதி அறிவிப்புக்காகக் காத்திருக்கும் தமிழ் சினிமா!

By Shankar

ரஜினியின் கோச்சடையான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்புக்காக பல படங்களும் காத்துக் கொண்டிருக்கின்றன.

மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு வரும் ரஜினி படம் கோச்சடையான். இந்தப் படத்தின் இசை சமீபத்தில் வெளியாகு சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது.

ட்ரைலரோ பெரும் சாதனைப் படைத்து வருகிறது, பார்வையாளர் எண்ணிக்கை அடிப்படையில்.

சமூக வலைத் தளங்களில் படம் குறித்து சிலர் எதிர்மறைக் கருத்துகளைப் பரப்பி வந்தாலும், படத்துக்கான எதிர்ப்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

கே எஸ் ரவிக்குமார்

கே எஸ் ரவிக்குமார்

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், "கோச்சடையான் எந்த மாதிரி படம் என்பதை ரசிகர்கள் உணர்ந்துள்ளனர். இந்தியாவில் தயாராகியுள்ள முதல் போட்டோ ரியலிஸ்டிக் படம் இது என்பதைப் புரிந்து வரவேற்கத் தயாராக உள்ளனர். இந்தப் படத்தில் வழக்கமான ரஜினியை எதிர்ப்பார்க்க முடியாது. ஆனால் ரஜினியை மிகப் பெரிய சாகச வீரராக இந்தப் படத்தில் பார்க்கலாம். மிகச் சிறந்த தொழில்நுட்பத்துடன் இந்தப் படம் உருவாகியுள்ளது," என்றார்.

19-ம் தேதி சென்சார்

19-ம் தேதி சென்சார்

ரூ 125 கோடியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் 3 டி பணிகள் முழுயடைந்துள்ளன. எனவே வரும் 19-ம் தேதி படத்தை சென்சாருக்கு அனுப்ப தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ஏப்ரல் 11 உறுதியா?

ஏப்ரல் 11 உறுதியா?

படத்தை ஏப்ரல் 11-ம் தேதி உலகம் முழுவதும் 6000 க்கும் அதிகமான அரங்குகளில் வெளியிடப் போவதாக முன்பு ஈராஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால் சூழ்நிலையைப் பொறுத்து இந்தத் தேதி மே 1-க்கு தள்ளிப் போகவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் ஏப்ரல் 11- என்பதில் இப்போதைக்கு உறுதியாக உள்ளனர் கோச்சடையான் தயாரிப்பாளர்கள்.

காத்திருக்கும் படங்கள்

காத்திருக்கும் படங்கள்

கோச்சடையான் வெளியீட்டைப் பொறுத்த தங்கள் படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்ய நான் சிகப்பு மனிதன், தெனாலிராமன் மற்றும் மான்கராத்தே போன்ற படங்கள் காத்திருக்கின்றன. ஏப்ரல் 11-ம் தேதி கோச்சடையான் வரவில்லை என்றால், அந்தத் தேதியில் இந்தப் படங்கள் வெளியாகக் கூடும். இல்லாவிட்டால் மே மாதத்துக்கு தள்ளிப் போடத் திட்டமிட்டுள்ளனர்.

திரையுலகம் மறுமலர்ச்சி பெற...

திரையுலகம் மறுமலர்ச்சி பெற...

கோச்சடையான் ரிலீசானால் தமிழ் சினிமாவுக்கே ஒரு மலர்ச்சி ஏற்படும் என திரையுலகினர் பலமாக நம்புகின்றனர். நசிந்த நிலையில் உள்ள தியேட்டர்காரர்கள், இந்தப் படத்தின் வருகைதான் தங்களைக் காப்பாற்றும் என காத்திருக்கின்றனர். பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X