ஹீரோயின் இல்லை, வெட்டு குத்து இல்லை.. படத்துக்கு சென்சார் கொடுத்ததோ 'ஏ சர்ட்டிபிகேட்'

By Veera Kumar

ஹீரோயின் இல்லாமல் உருவான ‘குபீர் என்ற படத்துக்கு சென்சார் போர்டு ‘ஏ சான்று அளித்து ஆச்சரியம் ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக ஹீரோயினுடன் நெருக்கமான காட்சி, ஆபாசமான காட்சி இருந்தால் படத்துக்கு ஏ சான்றிதழ் அளிக்கப்படும். வன்முறை அதிகம் இருந்தாலும் வழங்க முடியும். ஆனால் ஹீரோயின் என்று யாருமில்லாத ஒரு தமிழ் திரைப்படத்திற்கு சென்சார் ஏ சான்று கொடுத்துள்ளது.

Tamil film Kubeer gets 'A' certificate

இதுபற்றி குபீர் திரைப்படத்தின் இயக்குனர் திலீப் கூறியதாவது: ஐ டி நிறுவனத்தில் பணியாற்றும் 5 இளைஞர்கள் வாரத்தின் கடைசி நாளில் பார்ட்டி கொண்டாடுகிறார்கள். அதில் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றன. இதுதான் படத்தின் கரு. இதில் ஹீரோயின் கிடையாது. ஆபாசமோ, வெட்டு, குத்து, ரத்தம் போன்ற எந்த வன்முறையும் இல்லை.

காமெடி கலந்த கதை. ஆனாலும் படத்துக்கு சென்சார் ‘ஏ சான்றிதழ் வழங்கி உள்ளனர். ஆனால், ‘படத்தில் நீங்கள் நல்ல மெசேஜ் சொல்லி இருக்கிறீர்கள் என்று அதிகாரிகள் பாராட்டினர். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த படத்தில் புதுமுகங்கள் திலீப், ரவி, ஒயிட், தமிழ், பிரதாப், பிரபு நடித்திருக்கின்றனர். அனைவரும் ஒரே கல்லூரியில் படித்த மாணவர்கள். சந்தோஷ் ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

More from Filmibeat

Read more about: tamil cinema a certificate
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X