twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கனடாவின் பழமையான திரைப்பட விழாவுக்கு தேர்வாகியுள்ள தமிழ் திரைப்படம்.. என்ன படம்னு பாருங்க மக்களே!

    |

    சென்னை: கனடாவின் மிகப் பழமையான திரைப்பட விழாவில் தமிழ் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    பழமையான திரைப்பட விழாவான 49 வது மாண்ட்ரீல் விழா டு நோவியோ சினிமாவில் அக்டோபர் 7 முதல் 18 ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது கனடாவின் மிகப் பழமையான பட விழாவாகக் கருதப்படுகிறது.

    இதில் தமிழ் திரைப்படமான நிலநடுக்கம் திரைப்படம் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பாலாஜி வேம்பு செல்லி என்ற புதுமுக இயக்குநர் இயக்கியுள்ளார். இவர் கல்யாண சமையல் சாதம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

    Tamil film Nilanadukkam got selected for oldest film festival in Canada

    இந்த படவிழாவில் கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான ஜல்லிக்கட்டு படம் திரையிடப்பட்டது. எழுபது நிமிடங்கள் ஓடக்கூடிய நிலநடுக்கம் ஒரு எக்ஸ்பிரிரிமெண்டல் படமாகும்.

    நிலநடுக்கம் திரைப்படம் கொடைக்கானலில் இருந்து 35 - 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கக்கல் என்ற கிராமத்தைச் சுற்றி நடக்கும் ஆபத்தும் மர்மமும் நிறைந்த படமாக உருவாகியுள்ளது.

    இந்த திரைப்படம் தனது முதல் மேஜர் பிரேக்கை கொடுக்க நினைக்கும் புகைப்பட பத்திரிகையாளரைச் சுற்றி வருகிறது. போட்டோ ஜர்னலிஸ்ட்டை மனுசங்கடாவில் கதாநாயகனாக நடித்த ராஜீவ் ஆனந்த் நடிக்கிறார். மேலும் ஒரு சில நாடக கலைஞர்களும், கக்கலைச் சேர்ந்த சில உள்ளூர் வாசிகளும் இந்த படத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது.

    English summary
    Tamil film Nilanadukkam got selected for oldest film festival in Canada. The film, directed by Balaji Vembu Chelli a debutant is the first Tamil film to be selected at this festival.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X