அரசு அறிவிப்பை அடுத்து.. இந்தியன் 2 உட்பட 6 படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இன்று தொடக்கம்!

By

சென்னை: அரசு அறிவிப்பை அடுத்து, தமிழ்த் திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் இன்று தொடங்கியுள்ளன.

Recommended Video

முதலமைச்சருக்கு நன்றி | மனுவை ஏற்ற அரசு | Bharathiraja Emotional Video

லாக்டவுனுக்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, கேரளாவில், சினிமா போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை ஆரம்பிக்கலாம் என்று அம்மாநில அரசு அனுமதி அளித்தது.

இதே போல, தமிழ் சினிமாவிலும் அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

போஸ்ட்-புரொடக்சன்

போஸ்ட்-புரொடக்சன்

அப்போது ' 50 நாட்களுக்கு மேலாக திரைப்பட துறை சம்பந்தப்பட்ட எந்த வேலைகளும் நடக்கவில்லை. 50 படங்களுக்கு மேல் தடைபட்டு, ஏறக்குறைய 500 கோடி ரூபாய் முதலீடு முடங்கியுள்ளது. தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. படப்பிடிப்புக்கு அனுமதி கொடுக்க முடியாவிட்டாலும், போஸ்ட்-புரொடக்சன் பணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்' என்று பெப்சியும் தயாரிப்பாளர்களும் கோரிக்கை வைத்தனர்.

தமிழக அரசு அனுமதி

தமிழக அரசு அனுமதி

இதையடுத்து தமிழக அரசு, 11 ஆம் தேதி முதல், போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை தொடங்க அனுமதி அளித்தது . இதுபற்றி அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களும் சின்னத்திரை தயாரிப்பாளர்களும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை செய்வதற்காக மட்டும் அனுமதி அளிக்க கோரிக்கை வைத்திருந்தனர்.

சவுண்ட் மிக்சிங்

சவுண்ட் மிக்சிங்

அதை பரிசீலித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 11 ஆம் தேதி முதல் அந்தப் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளார். அதன்படி, படத்தொகுப்பு (5 பேர்) , கிராபிக்ஸ் (10 முதல் 15 பேர்) டப்பிங் (5 பேர்), டி.ஐ (5 பேர்), பின்னணி இசை (5 பேர்), சவுண்ட் மிக்சிங் ( 5 பேர்) ஆகிய பணிகளை மேற்கொள்ளலாம்.

கிருமி நாசினி

கிருமி நாசினி

சமூக இடைவெளியுடனும் முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி உபயோகித்தும் மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாடுகளை பின்பற்றியும் பணி செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் சென்னையில் இன்று தொடங்கியுள்ளன.

ஆர்.கே.செல்வமணி

ஆர்.கே.செல்வமணி

இதுபற்றி பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் கேட்டபோது, இதை உறுதி செய்தார். அவர் கூறும்போது, 'அரசு அறிவித்ததை அடுத்து, ஆறு படங்களின் டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் 3 சின்னத்திரை தொடர்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளும் இன்று தொடங்கியுள்ளன' என்று தெரிவித்தார்.

கமலின் இந்தியன் 2

கமலின் இந்தியன் 2

இதுபற்றி விசாரித்தபோது, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2, விஷால் நடித்துள்ள சக்ரா, த்ரிஷா நடிக்கும் ராங்கி ஆகிய படங்களின் எடிட்டிங், கபடதாரி, யோகிபாபு நடித்துள்ள காவி ஆவி நடுவுல தேவி ஆகிய படங்களின் டப்பிங் உட்பட 6 படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இன்று தொடங்கி இருப்பது தெரிய வந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X