இயக்குனர் பாரதிராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. தனி அதிகாரிக்குத் தயாரிப்பாளர்கள் கடிதம்!

By

சென்னை: புதிய தயாரிப்பாளர் சங்கத்தைத் தொடங்கியுள்ள பாரதிராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சிலர் தனி அதிகாரிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

இயக்குனர் பாரதிராஜா தலைமையில் புதிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தொடங்கப்பட்டு உள்ளது.

இதற்கு 'தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம்' என்று பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிளவுபடுத்தும் முயற்சி

பிளவுபடுத்தும் முயற்சி

இதை இயக்குனர் பாரதிராஜா தனது அறிக்கையில் நேற்று தெரிவித்திருந்தார். அவரது இந்த முடிவுக்கு தயாரிப்பாளர்கள் பலர் போர்கொடி தூக்கியுள்ளனர். இது தற்போதுள்ள திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தைப் பிளவுபடுத்தும் முயற்சி என்றும் பாரதிராஜாவின் இந்த முயற்சியை
தடுக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இது தொடர்பாக முடிவெடுக்க தயாரிப்பாளர்கள் நாளை சிறப்புக் கூட்டம் ஒன்றை கூட்டியுள்ளனர்.

தனி அதிகாரியிடம் புகார்

தனி அதிகாரியிடம் புகார்

இதற்கிடையே தயாரிப்பாளர் சங்கத்துக்கு அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தனி அதிகாரியும் மாவட்ட பதிவாளருமான என்.சேகருக்கு தயாரிப்பாளர்கள் புகார் ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் நடத்தி,
தேர்ந்தெடுக்கப்படும் புதிய நிர்வாகிகளிடம் பொறுப்பை ஒப்படைக்கும் வரை சங்கத்தின் நிர்வாகத்தை கவனிக்கும் அதிகாரத்தை தமிழக அரசு உங்களிடம் ஒப்படைத்தது.

புதிய தயாரிப்பாளர் சங்கம்

புதிய தயாரிப்பாளர் சங்கம்

அது முதல் தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதியரசர் ஜெயச்சந்திரனுடன் சேர்ந்து தேர்தலை நல்ல முறையில் நடத்திட நீங்களும் அதற்கான பணியில் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகிறீர்கள். இவை யாவும் சங்கத்தில் உள்ள தயாரிப்பாளர்களுக்கும் தெரியும். இந்த வேளையில், அதுவும் கொரோனாவின் கோரப்பிடியில் உலகமே சிக்கி தவிக்கும், குறிப்பாக, தமிழ் திரை உலகில் படப்பிடிப்பு, பட வெளியீடு இவை எதுவும் இல்லாத இந்த காலகட்டத்தில் புதிய தயாரிப்பாளர் சங்கம் துவக்குவதாக பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எதிரான நடவடிக்கை

எதிரான நடவடிக்கை

புதிய சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதாகவும் அதில் தெரிவித்துள்ளார். அவருடன் மேலும் சில பதவி வெறி பிடித்த விஷமிகள் உடனிருந்து செயல்படுவதாக தகவல்கள் வருகிறது. தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தனி அதிகாரியான தாங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகையில், அரசால் நிர்வகிக்கப்பட்டு வரும் சங்கத்திற்கு எதிராக புதிய சங்கம் துவங்குவது அரசுக்கு எதிரான நடவடிக்கையே.

அனைவர் மீதும்

அனைவர் மீதும்

ஆகவே சங்கத்தின் ஒற்றுமையையும் இறையாண்மையையும் குலைக்கும் வகையில் புதிதாக சங்கம் துவக்கியுள்ள பாரதிராஜா மற்றும் அவருடன் இருக்கும் நம் சங்கத்தை சார்ந்த விஷமிகள் அனைவரின் மீதும் நமது சங்கத்தின் பைலா விதி எண் 14ன் படி நடவடிக்கை எடுக்குமாறு பணிவன்போடு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X