விஷால் போட்டியிடுவாரா? நவம்பர் 22-ல் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்.. தேர்தல் அதிகாரி தகவல்!

By

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நவம்பர் 22ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம்.

கடந்த தேர்தலில் வெற்றி பெற்று நடிகர் விஷால் தலைவராக இருந்தார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதால் பிரச்னை ஏற்பட்டது.

உயர்நீதிமன்றம்

உயர்நீதிமன்றம்

பின்னர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதற்கிடையே அரசு, சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரியை நியமித்தது. இந்நிலையில் உயர்நீதிமன்றம் தேர்தல் அதிகாரியாக, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எம்.ஜெய்சந்திரனை அறிவித்து, தேர்தல் நடத்த உத்தரவிட்டது. கொரோனா காரணமாக சில முறை தேர்தல் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

அவகாசம் நீட்டிப்பு

அவகாசம் நீட்டிப்பு

இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்தி முடிக்க வரும் டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து தேர்தல் அதிகாரி எம்.ஜெய்சந்திரன் தேர்தல் தேதியை அறிவித்துள்ளார். அதன்படி நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

அறிவியல் கல்லூரி

அறிவியல் கல்லூரி

இது தொடர்பாக, தேர்தல் அதிகாரி ஜெய்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல், நவம்பர் 22 ஆம் தேதி அடையாறு, டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும். இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை, 12.10 2020 காலை 11 மணி முதல் 6 மணி வரை பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்கள்

விண்ணப்பங்கள்

15.10.2020 காலை 11 மணி முதல் 23.10.2020 மாலை 3 மணி வரை வேட்பு மனு தாக்கலுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். 16.10.2020 முதல் 23 ஆம் தேதி மாலைக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சங்க அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் சேர்க்க வேண்டும். 24.10.2020 காலை 11 மணி முதல் 29.10.2020 மாலை 4 மணி வரை வேட்புமனுவை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

வேட்பாளர் பட்டியல்

வேட்பாளர் பட்டியல்

மாலை 4 மணிக்கு மேல் திரும்ப பெற இயலாது. 29.10.2020 அன்று மாலை 6 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 30.10.2020 அன்று வேட்பாளர் பட்டியல் வாக்களிக்க தகுதி பெற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் விஷால் போட்டியிடுவரா என்பது தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X