தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்.. வாக்காளர் பட்டியல் குறைகளைச் சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

By

சென்னை: திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வாக்காளர் பட்டியல் தொடர்பான குறைகளை சமர்ப்பிக்க அடுத்த மாதம் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

SRILANKAN SILK SMITHA | TALKING 2 MUCH EP-04 | Filmibeat Tamil

இது தொடர்பாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்காக சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள நீதியரசர் எம்.ஜெய்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Tamil Film Producers Council Election officer statement about voters list

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திப் தேர்தல் அட்டவணை ஏப்ரல் 17 ஆம் தேதி வெளியிடப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்தல் நடத்த கால அவகாசம் வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் சங்க உறுப்பினர்கள் வழக்குத் தொடர்ந்தனர். நீதிமன்றம், செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டுள்ளது.

இதனால் ஏப்ரல் 17 ஆம் தேதி அறிவித்திருந்த தேர்தல் அட்டவணை ரத்து செய்யப்படுகிறது. புதிய அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும். கொரோனா ஊரடங்கால் சங்க உறுப்பினர்களில் பலர் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று கேட்டுக்கொண்டதால், சந்தா தொகையை செலுத்துவதற்கான கால அவகாசம் அடுத்த மாதம் 15 ஆம் தேதி (15.06.2020) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அன்று மாலை 6 மணிக்குள் செலுத்திவிட வேண்டும்.

வாக்காளர் பட்டியல் தொடர்பாக குறைகளை சமர்பிக்கவும் அடுத்த மாதம் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் கடிதம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலமும் சமர்ப்பிக்கலாம். இந்த தேதிகள் எந்த காரணத்தைக் கொண்டும் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X