சங்கத் தேர்தல் தள்ளிப் போவதால்.. சினிமா பிரச்னைகளைத் தீர்க்க முன்னாள் தலைவர்கள் தலைமையில் குழு!

By

சென்னை: தயாரிப்பாளர் சங்க தேர்தல் தள்ளிப் போவதால், சினிமா பிரச்னைகளை தீர்க்க குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரானா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாதிப்பால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மனரீதியாகவும், தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னுதாரணமாக

முன்னுதாரணமாக

நமது சங்கத்திற்கு தேர்தல் தள்ளிப்போகக்கூடிய சூழ்நிலை உள்ளதால் இந்த நேரத்தை வீணாக்காமல் நல்ல விஷயங்களை பேசி தீர்வு காண்பதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தேர்தல் நேரத்தில் பல அணிகளாக பிரிந்தாலும் திரைத்துறையை சீர்தூக்கி நிலைநிறுத்தும் விஷயத்தில் நாம் அனைவரும் ஓர் அணியாக ஒருங்கிணைந்து செயல்பட்டு தீர்வு கண்டு அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ வேண்டும்.

நிம்மதியாக செயல்பட

நிம்மதியாக செயல்பட

நமக்கு உண்டான பிரச்னையை நாமே ஒருங்கிணைந்து தீர்த்துக்கொள்ள போவதால் இதற்கு நீதிமன்றமோ, நீதிபதியோ, பதிவாளரோ மறுப்பு சொல்லப்போவதில்லை. நமது சக உறுப்பினர்கள் திரைத்துறை சம்பந்தப்பட்ட பிரச்னைகளை அரசாங்கத்திடமும் மற்றும் திரைப்பட நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், பைனான்சியர்கள் கலந்து பேசி திரைத்துறைக்கு ஏற்பட்டிருக்கும் பேரிழப்பை சரிசெய்து தமிழ் திரைத்துறையும் தயாரிப்பாளர்களும் நிம்மதியாக செயல்பட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

எஸ் ஏ சந்திரசேகர்

எஸ் ஏ சந்திரசேகர்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்களாகிய பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர், எஸ் தாணு, கேயார், டிஜி தியாகராஜன், முரளிதரன் இவர்களுடன் அனுபவம் வாய்ந்த 36 தயாரிப்பாளர்கள் அடங்கிய 42 பேர் கொண்ட குழு, சினிமாவில் உள்ள மற்ற துறையினருடன் கலந்து பேசி நல்லதொரு விடியலை தயாரிப்பாளர்களுக்கு ஏற்படுத்தி தருவார்கள்.

கமீலா நாசர்

கமீலா நாசர்

இதனால் நம்பிக்கையுடன் தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒருங்கிணைத்து இந்தக் குழுவுக்கு ஆதரவும், ஆலோசனைகளையும் நல்கி திரைத்துறை சிறப்பாக விளங்கிட ஒத்துழைப்பினை நல்கிடுவோம்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் டி. சிவா, ௮ன்பு செழியன், ஐசரி கணேஷ், கமீலா நாசர், கதிரேசன், எடிட்டர் மோகன், ராதாகிருஷ்ணன், முரளி ராம நாராயணன், சிவசக்தி பாண்டியன் உட்பட பலர் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X