புதிய சங்கம் தொடங்குவதா? பாரதிராஜாவுக்கு கடும் எதிர்ப்பு.. தயாரிப்பாளர்கள் நாளை அவசரக் கூட்டம்!

By

சென்னை: புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கிய பாரதிராஜாவுக்குத் தயாரிப்பாளர்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விவாதிக்க நாளை, அவசரக்கூட்டம் நடக்கிறது.

இயக்குனர் பாரதிராஜா தலைமையில் புதிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தொடங்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாயின.

இதற்கு 'தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம்' என்று பெயர் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

உருவாக்க வேண்டாம்

உருவாக்க வேண்டாம்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குப் போட்டியாக இந்தப் புதிய சங்கம் உருவாகிறது என்றும் இன்னொரு சங்கத்தை உருவாக்க வேண்டாம் என்றும் பல தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர். 'எம்.ஜி.ஆர் ஆலோசனைபடி உருவான சங்கம் இது. சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கு செப்டம்பரில் தொடர இருக்கிறது. இந்நிலையில் திடீரென்று புதிய சங்கத்தை உருவாக்குவது வேதனையாக இருக்கிறது' என்று மூத்த தயாரிப்பாளர்கள் கூறினர்.

பாரதிராஜா மறுத்தார்

பாரதிராஜா மறுத்தார்

இதையடுத்து மறுநாளே, இயக்குனர் பாரதி ராஜா அவசரமாக இந்தச் செய்தியை மறுத்தார். பல்வேறு ஊடகங்களில் எனது தலைமையில் வந்த புதிய அமைப்பு பற்றியும் நிர்வாகிகள் பட்டியல் பற்றியும் வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில், திடீரென்று புதிய சங்கம் தொடங்கப்பட்டு விட்டதாகவும் தனது தலைமையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருவதாகவும் நேற்று வேறொரு அறிக்கை வெளியிட்டார் பாரதிராஜா.

ராதாகிருஷ்ணன்

ராதாகிருஷ்ணன்

முதல் நாள் மறுத்துவிட்டு மறுநாள் ஏன் இப்படியொரு அறிக்கையை அவர் வெளியிட்டார் என்று தயாரிப்பாளர்கள் குழம்பினர். இந்நிலையில் அவர் தொடங்கி உள்ள புதிய சங்கத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன் இதுபற்றி ஆலோசிப்பதற்காக, நாளை ஒரு கூட்டத்தை கூட்டியுள்ளார். இதுபற்றி தயாரிப்பாளர்களுக்கு அவர் அனுப்பியுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

காலத்தின் கட்டாயமா?

காலத்தின் கட்டாயமா?

இயக்குனர் பாரதிராஜா, கடந்த 1 ஆம் தேதி தனது அறிக்கையில், எனது தலைமையில் புதிய சங்கம் தொடங்கப்படவில்லை என்ற உத்தரவாதத்தை அறிவித்திருந்தார். ஆனால், 3 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், காலத்தின் கட்டாயம், புதிய சங்கத்தை உருவாக்க வேண்டி இருப்பதால் அதைத் தொடங்கி இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஒரே நாளில் என்ன காலத்தின் கட்டாயம் ஏற்பட்டுவிட்டது என்பது தெரியவில்லை.

 ஆலோசனை வேண்டும்

ஆலோசனை வேண்டும்

இது நமது தயாரிப்பாளர் சங்கத்தைப் பிளவுபடுத்துகிற முயற்சி. இதுபற்றி நாம் அனைவரும் அணி பாகுபாகு இல்லாமல், ஒருமித்த குரலோடு இணைந்து முடிவெடுக்க வேண்டும். தயாரிப்பாளர் சங்கம் பிளவு படாமல் இருப்பது பற்றி ஆலோசிப்பதற்கு நாளை (புதன்கிழமை) காலை. தயாரிப்பாளர்களை சங்கத்துக்கு வருமாறு அழைக்கிறேன். உங்கள் ஆலோசனையை நீங்கள் தெரிவிக்கவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். இது தயாரிப்பாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X