twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்ன கொடுமை கோமளா இது.. விஜய் அப்பாவின் "கேப்மாரி"தனமும்.. சந்தானம் ஆடும் டிக்கிலோனாவும்!

    |

    சென்னை: சமீப காலமாக வெளிவரும் தமிழ் சினிமா தலைப்புகள் வேடிக்கையாக மட்டுமன்றி அப்படங்களை பார்க்க தூண்டுவதாக உள்ளது.

    அந்த வகையில் இளைய தளபதி விஜய் அப்பாவும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் (எஸ்.ஏ.சி) நடிகர் ஜெய்யை வைத்து இயக்கும் புதிய படத்திற்கு கேப்மாரி என பெயரிடப்பட்டுள்ளது. இதுவே அவர் இயக்கும் கடைசி திரைப்படம் என தெரிவித்துள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்

    இதுவரை மூத்த திரைப்படத் தயாரிப்பாளராக சமூகப் பிரச்சினைகளைக் கையாளும் படங்களுக்கு பெயர் பெற்றவர், ஆனால் அவர் இயக்கும் கடைசி படம், அவரைப் பொறுத்தவரை, ஒரு வண்ணமயமான பொழுதுபோக்கு படமாக இருக்க போவது உறுதி.

    90களிந் இளைஞர்கள்

    90களிந் இளைஞர்கள்

    இப்படம் 90' களின் இளைஞர்களை கவர்ந்த ரசிகன் படம் போல், இக்கால இளைஞர்களை கவரக் கூடியதாக இருக்குமாம். அதே போல் அவரது முந்தைய படங்களை போல் சர்ச்சையை தூண்ட கூடியதாகவும் இருக்குமாம்.

    புதுப் படம்

    புதுப் படம்

    அதே போல் சில வருடங்களுக்கு முன்பு அனைத்து முன்னனி ஹீரோக்களுடன் நடித்து காமெடியில் கலக்கியவர் சந்தானம். தற்போது தனது நடனம், நடை மற்றும் உடலமைப்பை மேம்படுத்துவதில் கடுமையாக உழைத்து, சினிமா துறையில் ஒரு ஹீரோவாக மறு நுழைவு அளித்தார்.

    அறிவியல் படம்

    அறிவியல் படம்

    அவர் இப்போது டிக்கிலோனா என்ற அறிவியல் புனைகதை(sci-fi) திரைப்படத்தில் நடிக்க உள்ளார். டிக்கிலோனா என்ற சொல் ஜென்டில்மேன் படத்தில் காமெடி இரட்டையர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வார்த்தை.

    மூனுமே அவரே

    மூனுமே அவரே

    இப்படத்தில் ஹீரோ, வில்லன் மற்றும் காமெடியன் என 3 வேடங்களில் நடித்து அசத்த போகிறார். இப்படம் ஏப்ரல் 2020 ல் திரைக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    என்ன கொடுமை கோமளா இது.. இது படத்தோட தலைப்பு இல்லைங்க.. நாமளே அயர்ந்து போய் சொன்னது!

    English summary
    Tamil film titles are creating new interest among the fans.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X