சர்வதேச விருதுகளை வேட்டையாடும் தமிழ்ப் படங்கள்: விஜய் சேதுபதியின் படத்துக்கும் ஒரு கோல்டன் விருது!

டோக்கியோ: சமீப காலங்களாக தமிழில் வெளியாகும் சிறந்த படங்கள் சர்வதேச திரைப்பட விருதுகளை வென்று அசத்துகின்றன.

சூர்யாவின் 'ஜெய் பீம்' திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வென்றது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் வெளியான விஜய் சேதுபதியின் திரைப்படமும் கோல்டன் விருதை வென்று சாதனை படைத்துள்ளது.

அசத்தும் தமிழ்ப் படங்கள்

அசத்தும் தமிழ்ப் படங்கள்

கொரோனாவுக்குப் பின்னர் திரைப்படங்களின் நிலைமை குறித்து பலவிதமான கருத்துகள் எழுந்தன. இனிமேல் படங்கள் வெளியாவதில் ஏராளமான சிக்கல்கள் இருக்கும், ரசிகர்கள் மீண்டும் தியேட்டர்களுக்கு செல்லமாட்டார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டன. ஆனால், இவை எல்லாவற்றையும் பொய்யாக்கும் விதமாக அதிகமான படங்கள் வெளியாவதோடு, அதில் சிறந்த படங்கள் சர்வதேச அளவில் விருதுகளை வென்று காட்டியுள்ளன.

ஆரோக்கியமான போட்டி

ஆரோக்கியமான போட்டி

பெரும்பாலான இயக்குநர்கள் விருதுகளுக்காக படங்கள் இயக்கவில்லை என்றாலும், சிறந்த படங்களுக்கான அங்கீகாரமாக விருதுகள் கிடைக்கும் போது, அது அவர்களுக்கு மேலும் உத்வேகம் கொடுக்கிறது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் கூட, சூரரைப் போற்று, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மண்டேலா ஆகிய தமிழ்ப் படங்கள் கெத்து காட்டின. இது தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான சூழலை உருவாக்கியுள்ளது.

சர்வதேச விருதுகளையும் விட்டுவைக்காத கோலிவுட்

சர்வதேச விருதுகளையும் விட்டுவைக்காத கோலிவுட்

தேசிய விருதுகள் மட்டுமின்றி சர்வதேச திரைப்பட விருதுகளும் தமிழ் படங்களுக்கு அசால்ட்டாகிப் போனது. சூர்யாவின் 'ஜெய் பீம்' திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களை அலங்கரித்து வருகிறது. இந்நிலையில், விஜய் சேதுபதியின் 'மாமனிதன்' படமும், மிக முக்கியமான சர்வதேச விருதை வென்றுள்ளது.

பிரபலங்கள் பாராட்டிய மாமனிதன்

பிரபலங்கள் பாராட்டிய மாமனிதன்

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்திருந்த 'மாமனிதன்' படத்திற்கு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல், 'மாமனிதன்' படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் சீனு ராமசாமிக்கும் விஜய் சேதுபதிக்கும் பாராட்டுகளைத் தெரிவித்திருந்தனர்.

விஜய் சேதுபதிக்கு தரமான அங்கீகாரம்

விஜய் சேதுபதிக்கு தரமான அங்கீகாரம்

குடும்பத்துக்காக தன்னையே தொலைத்துவிட்டு குற்றவுணர்ச்சியுடன் வாழும் மிடில் கிளாஸ் மனிதனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். தொடர்ந்து ஆக்சன் படங்களில் நடித்து வந்த அவருக்கு, 'மாமனிதன்' படம் நல்ல கம்பேக் கொடுத்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்தினர் கொண்டாடும் படமாகவும் 'மாமனிதன்' அமைந்தது.

சர்வதேச அங்கீகாரமும் கோல்டன் விருதும்

சர்வதேச அங்கீகாரமும் கோல்டன் விருதும்

இந்நிலையில், 'மாமனிதன்' படத்திற்கு சர்வதேச அளவில் தரமான அங்கீகாரம் கிடைத்துள்ளது. டோக்கியோவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், 'மாமனிதன்' படத்திற்கு கோல்டன் விருது கிடைத்துள்ளது. ஆசிய அளவில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு, கோல்டன் விருது வழங்கப்படுகிறது. இதனை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் சீனு ராமசாமி, அனைவருக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். ரசிகர்களும் அவருக்கு தங்களது வாழ்த்தைத் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X