பரியேறும் பெருமாள், பேரன்பு, டூலெட்.. கோவா சர்வதேச திரைப்பட விழாவில் கொண்டாடப்பட்ட தமிழ் படங்கள்!
சென்னை: கோவாவில் இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், தமிழ் படங்கள் பல கொண்டாடப்பட்டன.
எந்த ஆண்டும் இல்லாத வகையில் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்த வருடம் ஆறு தமிழ் படங்கள் கலந்துகொண்டன. பரியேறும் பெருமாள், பேரன்பு, பாரம், டூ லெட் ஆகிய 4 படங்கள் திரையிடப்பட்டன.

கருணாநிதி வசனத்தில் எம்.ஜி.ஆர் நடித்த மலைக்கள்ளன் மற்றும் கனடாவில் இருந்து ரூபா ஆகிய மேலும் 2 படங்களும் கலந்து கொண்டன. அனைத்து படங்களுமே வெகுவாக பார்வையாளர்களைக் கவர்ந்தது.
பரியேறும் பெருமாள் படத்துக்கு பாராட்டுக்கள் குவிந்தன. அதேபோல், தேசிய விருது பெற்ற டூ லெட் படம் 3 பிரிவுகளில் கலந்து கொண்டது, சிறப்பு விருதை பெற்றது. இந்த படத்தை ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கி இருந்தார்.
ஏற்கனவே பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட டூ லெட் படம், இதுவரை 26 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்ட படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











