twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    RRR ‘கோலே’ பாடலில் கப்பலோட்டிய தமிழன்.. சுதந்திர போராட்ட வீரர்களை சூப்பரா பெருமைப்படுத்திய ராஜமெளலி!

    |

    சென்னை: இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள RRR திரைப்படம் தமிழில் இரத்தம் ரணம் ரெளத்திரம் எனும் டைட்டிலில் வரும் மார்ச் 25ம் தேதி வெளியாகிறது.

    படத்தின் ரிலீஸ் புரமோஷனுக்காக இன்னொரு சிறப்பான பாடலை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் ராஜமெளலி.

    அநேகமாக இந்த பாடல் படம் முடிந்து கிரெடிட்ஸ் போடும் போது திரையிடப்படும் என தெரிகிறது. இந்த பாடலில் தமிழ்நாட்டின் பெருமைக்குரிய சுதந்திர போராட்ட தியாகி வ.உ. சிதம்பரனார் பெயரும் அவரது பிரம்மாண்ட வடிவமும் இடம்பெற்றிருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள ராஜமெளலி படம்.. ரிலீசுக்கு முன்பே இத்தனை கோடிக்கு வியாபாரமா?400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள ராஜமெளலி படம்.. ரிலீசுக்கு முன்பே இத்தனை கோடிக்கு வியாபாரமா?

    கோடிக்கணக்கில் புரமோஷன்

    கோடிக்கணக்கில் புரமோஷன்

    400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 50 கோடிக்கு மேல் புரமோஷனுக்கே ஒதுக்கி இருப்பார் போல இயக்குநர் ராஜமெளலி. இந்த ஆண்டு ஜனவரி 7ம் தேதி எப்படியாவது படத்தை ரிலீஸ் செய்து பொங்கல் வசூல் வேட்டையை நடத்தி விட வேண்டும் என நினைத்த அவருக்கு கொரோனா மற்றும் ஜகன் மோகன் ரெட்டியின் டிக்கெட் நடவடிக்கையும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    இனிமே வேண்டாம்

    இனிமே வேண்டாம்

    மும்பை, சென்னை, ஹைதராபாத், கொச்சின் என பறந்து பறந்து பல கோடிகளுக்கு செட் போட்டு நடத்தப்பட்ட புரமோஷன்களே போதும், புதிதாக எந்தவொரு புரமோஷனும் வேண்டாம் என்றும் தயாரிப்பு நிறுவனம் இனியும் செலவு செய்ய ரெடியாக இல்லை என்பதையும் உணர்ந்த ராஜமெளலி ரிலீஸ் புரமோஷனுக்காக நிகழ்ச்சி ஏதும் நடத்தாமல் புதிய பாடல் ஒன்றை வெளியிட்டு அசத்தி வருகிறார்.

    சுதந்திர போராட்ட வீரர்களுக்காக

    சுதந்திர போராட்ட வீரர்களுக்காக

    நாடு முழுவதும் ஒவ்வொரு ஊரிலும் தேசத்துக்காக தங்களது வாழ்க்கையையும் இன்னுயிரையும் ஈந்த சுதந்திர போராட்ட வீரர்களை பெருமைப்படுத்தும் விதமாக உருவாகி உள்ள கோலே பாடல் நேற்று வெளியாகி யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபாய் படேல், வ,உ. சிதம்பரனார், சத்ரபதி சிவாஜி, பகத் சிங் என ஏகப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய வரிகள் இந்த பாடலில் இடம்பெற்றுள்ளன.

    கப்பலோட்டிய தமிழன்

    கப்பலோட்டிய தமிழன்

    காந்தி, அம்பேத்கர் போன்ற தலைவர்கள் இந்த பாடலில் இடம்பெறவில்லை. பெரும்பாலும், ஆயுதத்தை ஏந்தி போராடியவர்களையே இந்த பாடலில் குறிப்பிட்டுள்ளனர். இதில், கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரை திருநெல்வேலியின் வீரமான கோலே என பாடலாசிரியர் மதன் கார்க்கி குறிப்பிட்டுள்ளது திருநெல்வேலிகாரர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அதே சமயம் மற்ற சுதந்திர போராட்ட வீரர்களை மாநிலங்களுடன் குறிப்பிட்டு வரிகள் உள்ள நிலையில், வ.உ.சியை ஏன் தமிழ்நாட்டு சுதந்திர போராட்ட வீரர் என சொல்லவில்லை என கேள்விகளும் எழுந்துள்ளன.

    மூவரும் செம

    மூவரும் செம

    நாட்டுக் கூத்து பாடலில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் மட்டுமே இணைந்து ஆட்டம் போட்ட நிலையில், இந்த பாடலில் நடிகை ஆலியா பட்டும் இவர்கள் இருவருடன் இணைந்து செம நடனம் போட்டுள்ளார். தெலுங்கு ட்யூனுக்கு போட்ட தமிழ் பாடல் போல இருப்பதால், வரிகள் பெரும் அளவில் ஹலமதி ஹபிபோ போலவே புரியாமல் இருப்பதாக கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

    English summary
    Tamil Freedom Fighter VO Chidambaram Pillai also honoured in SS Rajamouli’s RRR Koelae Video Song. RamCharan, JR NTR and Alia Bhatt done a special dance to this song.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X