ரஜினி பட டைட்டிலை கைப்பற்றிய ஹீரோக்கள்...இதுல யாரு ஹிட் கொடுத்தது தெரியுமா?

சென்னை : ரஜினி படம் என்றாலே பிளாக் பஸ்டர் என்பது தான் அந்த காலம் முதல் இந்த காலம் வரை உள்ள நிலவரம். இதில் ஒரு சில படங்கள் மட்டுமே விதிவிலக்கு. ஆனால் ரஜினியின் தோல்வி படங்கள் என சொல்லப்படும் படங்களிலும் பாடல்கள் ஹிட் ஆகி இருக்கும்.

கமல்ஷியல் ரீதியாக வெற்றி பெறாத படங்களும் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும். பெயர் சொன்னாலே நினைவில் வரும் படங்களாக இருக்கும். அப்படி ரஜினி நடித்து, ஹிட்டான பல படங்களின் டைட்டில்கள் சமீப ஆண்டுகளாக மீண்டும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ரஜினி பட டைட்டிலில் இன்றைய ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன. அப்படி எதிர்பார்க்கப்பட்ட படங்கள், ரஜினி பட டைட்டிலை கைப்பற்றிய ஹீரோக்கள், அவர்கள் படங்களின் வெற்றி நிலவரம் பற்றி இங்கே பார்க்கலாம்.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

ரஜினி நடித்த வேலைக்காரன் பட டைட்டிலை கைப்பற்றிய சிவகார்த்திகேயன் தற்போது இரண்டாவது முறையாக மாவீரன் படத்தின் டைட்டிலையும் கைப்பற்றி உள்ளார். சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபகத் ஃபாசில் நடித்த வேலைக்காரன் படம் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை என்றாலும், பெரிய அளவில் பேசப்பட்டது.

அஜித்குமார்

அஜித்குமார்

ரஜினியின் சுப்பர் ஹிட் படமான பில்லா படத்தின் டைட்டிலில் நடித்தார் அஜித். டைட்டில் மட்டுமல்ல கதையும் அதே தான். இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகமாக பில்லா 2 படமும் இயக்கப்பட்டது. அஜித் இரட்டை வேடங்களில் கேங்ஸ்டராக நடித்த படம். இரண்டு பாகங்களும் ஹிட்டான நிலையில் பில்லா 3 படத்தை இயக்க ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தங்கமகன்

தங்கமகன்

பொல்லாதவன் படத்தை தொடர்ந்து ரஜினி நடித்த தங்கமகன் பட டைட்டிலிலும் தனுஷ் நடித்தார். இதில் பொல்லாதவன் ஹிட் படமாக அமைந்த நிலையில் தங்கமகன், சுமாரான வரவேற்பையே பெற்றன.

நான் மகான் அல்ல

நான் மகான் அல்ல

ரஜினியின் ஆக்ஷன் ஹீரோ டைட்டிலான நான் மகான் அல்ல படத்தில் கார்த்தி நடித்திருந்தார். இந்த படம் கரா்த்தியின் சினிமா இமேஜையே மாற்றியது. கார்த்தியை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியது இந்த படம் தான்.

நான் சிகப்பு மனிதன்

நான் சிகப்பு மனிதன்

ரஜினியின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக நான் சிவப்பு மனிதன் டைட்டிலில் விஷால் நடித்தார். ஆனால் இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. டைட்டிலுக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லை என்று தான் பலர் தெரிவித்தனர்.

மனிதன்

மனிதன்

ரஜினி நடித்த மனிதன் பட டைட்டிலில் உதயநிதி ஸ்டாலின் வழக்கறிஞர் ரோலில் நடித்தார். உதயநிதியின் திரையுலக பயணத்தில் மனிதன் படம் மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

கழுகு

கழுகு

ரஜினி நடித்து, படம் முழுவதும் பஸ்ஸிலேயே பயணம் செய்வது போல் காட்டப்படும் படம் கழுகு. இந்த பட டைட்டிலில் நடிகர் கிருஷ்ணா நடித்திருந்தார். இந்த படமும் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு, கடைசியில் தோல்வி படமாக அமைந்தது. .

தீ

தீ

டாப் ஆக்ஷன் ஹீரோக்கள் மட்டுமல்ல டைரக்டராக இருந்து நடிகரான சுந்தர்.சி.,யும் ரஜினி பட டைட்டிலில் இரண்டு படங்களில் நடித்துள்ளார். குரு சிஷ்யன் படத்தை தொடர்ந்து தீ பட டைட்டிலிலும் சுந்தர்.சி நடித்தார். ஆனால் இரண்டு படங்களுமே சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.

தில்லு முல்லு

தில்லு முல்லு

ரஜினி நடித்த முழு நீள பிளாக்பஸ்டர் காமெடி படமான தில்லு முல்லு பட டைட்டிலில் மிர்ச்சி சிவா நடித்துள்ளார். இதுவும் காமெடி படமாக எடுக்கப்பட்டது. ஆனால் ரசிகர்களின் மனங்களை கவர இந்த படம் தவறி விட்டது.

விடுதலை

விடுதலை

ரஜினி, சிவாஜி உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த படம் விடுதலை. ரஜினி - சிவாஜி காம்போவில் உருவான இந்த படம் செம ஹிட் படமாக அமைந்தது. தற்போது இதே டைட்டிலில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கும் விடுதலை என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த படம் இரண்டு பாகங்களாக இயக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X