twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழில் பெரிய ஹீரோக்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்... உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!

    |

    சென்னை : தயாரிப்பாளராக அறிமுகமாகி இப்போது தமிழ் சினிமாவில் வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்

    திரைத்துறை ஒருபுறம் அரசியல் ஒருபுறம் என கலக்கிக் கொண்டிருக்கும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது

    இந்நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் நேர்காணலில் பேசிய உதயநிதி ஸ்டாலின் தமிழில் பெரிய ஹீரோக்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்

    கிடைச்ச கேப்புல சிக்ஸர் அடிக்கும் இளம் மாஸ் ஹீரோ.. உச்ச நடிகரின் வாரிசாக மாஸ் பிளான் போடுகிறாராம்? கிடைச்ச கேப்புல சிக்ஸர் அடிக்கும் இளம் மாஸ் ஹீரோ.. உச்ச நடிகரின் வாரிசாக மாஸ் பிளான் போடுகிறாராம்?

    இளம் ஹீரோவாக

    இளம் ஹீரோவாக

    தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் ஹீரோவாக நடித்து பிரபலமானார் இளம் ஹீரோவாக உள்ளார் உதயநிதி ஸ்டாலின். ஓகே ஓகே, நண்பேன்டா, இது கதிர்வேலன் காதல் ,கெத்து ,மனிதன், சரவணன் இருக்க பயமேன், பொதுவாக எம்மனசு தங்கம், நிமிர், கண்ணேகலைமானே, சைக்கோ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

    நெஞ்சுக்கு நீதி

    நெஞ்சுக்கு நீதி

    கலகலப்பான காமெடி படங்களில் நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின் இப்பொழுது சமூக அக்கறையான படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் அந்த வகையில் ஹிந்தியில் ஆயுஸ்மான் குர்ரானா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ஆர்டிகல் 15 தமிழ் ரீ-மேக் நெஞ்சுக்கு நீதியில் நேச்சுரலான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்கள். நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்குனர் கானா இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது. ஜாதி தீண்டாமை குறித்து இந்த படத்தில் மிக அழுத்தமாக பேசியுள்ள வசனங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது

    நெஞ்சுக்கு நீதி கொடுத்த பெரும் வரவேற்பை தொடர்ந்து அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார். ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

    தமிழ் ஹீரோக்கள் சம்பளத்தை குறைத்து

    தமிழ் ஹீரோக்கள் சம்பளத்தை குறைத்து

    கே ஜி எஃப் 2 வெளியாகி பிரமாண்ட வெற்றிபெற்ற நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் அப்போதுதான் தரமான படங்கள் வெளியாகும் என்ற பேச்சு பரவலாக கேட்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தமிழில் உள்ள பெரிய நடிகர்கள் சம்பளத்தை கொஞ்சம் குறைத்துக் கொண்டு படுத்து செலவு செய்தால் பெட்டராக இருக்கும். அதற்கு மிகப்பெரிய உதாரணம் கே ஜி எஃப் 2.

    ஹீரோவுக்கு மட்டுமே 65% சம்பளமாக

    ஹீரோவுக்கு மட்டுமே 65% சம்பளமாக

    இந்த படத்தில் ஹீரோவுக்கு மிகக்குறைந்த அளவே சம்பளம் தரப்பட்டுள்ளது மீதி பணம் முழுவதும் படத்தின் மேக்கிங்கில் செலவு செய்துள்ளதை பார்க்கும் போதே தெரிகிறது. அவ்வளவு பிரம்மாண்டமாக உள்ளது. ஆனால் தமிழில் ஒரு படத்தின் 65 சதவீத பட்ஜெட் ஹீரோவுக்கு மட்டுமே சம்பளமாக கொடுக்கப்படுகிறது. அதைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    English summary
    Tamil heros should reduce their salary for movie, request from Udhayanidhi Stalin
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X