Ameer Speech: பா ரஞ்சித், மாரி செல்வராஜ் தான் சாதி சண்டைக்கு காரணமா? அமீர் என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: பா ரஞ்சித், மாரி செல்வராஜ் தான் சாதி சண்டைக்கு காரணம் என்று பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், இயக்குநர் அமீர் அதிரடியான பதிலளித்துள்ளார்.

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள தமிழ்க்குடிமகன் படத்தில் இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார்.

Tamil Kudimagan Audio Launch director Ameer Speech

இதில்,கதாநாயகியாக புகழ் ஸ்ரீபிரியங்காவும், லால், எஸ் ஏ சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, தீபிக்ஷா, அருள்தாஸ், ரவிமரியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அமீர் பேச்சு: இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது இதில், கலந்து கொண்டு பேசிய இயக்குநர் அமீர். சாதியை ஒழிக்க படம் எடுத்துவிட்டால் இங்கே சாதி ஒழிந்துவிடுமா என்கிற கேள்வி அனைவர் இடத்திலும் உள்ளது. ஒரு பெயரை நினைவுப்படுத்த வேண்டிய பொருப்பு எங்களுக்கு உண்டு. மாரி செல்வராஜ், மாமன்னன் இசைவெளியீடு விழாவில், தேவர் மகன் படத்தில் வரும் இசக்கி கதாபாத்திரம் பற்றி பேசி இருந்தார். மேலும், இசக்கி கதாபாத்திரம் தான் மாமன்னன் படத்தை எடுக்க காரணம் என்று சொன்னார்.

பா ரஞ்சித், மாரி செல்வராஜ் காரணம்: மேலும், தென் மாவட்டத்தை சேர்ந்த இசக்கி ராஜா என்கிற ஒரு சகோதரர் யூடியூபில் ஒரு காணோளியை பதிவிட்டு இருந்தார். அவர் மிகவும் தரக்குறைவான வார்த்தையால் சினிமாக்காரர்களை திட்டியிருந்தார். மேலும், பா ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் போன்றவர்கள் படம் எடுத்துதான் சாதி பிரச்சனையை ஏற்படுத்துகிறார்கள். அதுவரை நாங்கள் அண்ணன் தம்பியாகத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று பேசி இருந்தார்.

அப்போ ஏன் சொல்லவில்லை: சினிமாக்காரர்களால் தான் நாடு மோசமானது என்று சொன்ன போது ஒருவேலை அதிகாரத்தில் இருப்பவர்களை சொல்கிறார் என்று நினைத்தேன். ஆனால், இந்த வார்த்தை தேவர்மகன் படம் வரும் போது ஏன் வரவில்லை, சின்னக்கவுண்டர் படம் வரும் போது வரவில்லை. போதும்டா, உங்களால் தான் எங்களுக்குள் சாதி சண்டை வருகிறது என்று ஏன் சொல்லவில்லை.

யாரையும் சண்டைக்கு கூப்பிடவில்லை: அப்படி என்றால், பா ரஞ்சித், மாரி செல்வராஜ் சொல்வதை மக்கள் காது கொடுத்து கேட்கத் தொடங்கிவிட்டார். அதை அவர்கள் ஆபத்தாக உணருகிறார்கள். இதனால் தான் சாதி பிரச்சனையை ஏற்படுகிறது என்று பேசத் தொடங்கி இருக்கிறார்கள். மாரி செல்வராஜ் படங்களில் யாரையும் சண்டைக்கு வாடா என்று கூப்பிடவில்லை. என்னை ஏன் இப்படி நடத்துறீங்க என்று தான் கேட்கிறார்.

சாதியை ஒழிக்க சினிமா தேவை: சாதி இன்று மேலோங்கி இருப்பதற்கு காரணம் அரசியல் தான். சாதியை உருவாக்கியது சனாதனம், சாதியை பிடித்துக்கொண்டு இருப்பது அரசியல், அதை உயிர்ப்போடு வைத்து இருப்பது அரசியல், அப்படி அந்த அரசியல் மாற்றத்தை நிகழ்ந்த வேண்டும் என்றால் அதற்கு சினிமா தேவை. சினிமாவால் சாதியை ஒழித்துவிடமுடியாது. ஆனால், சினிமாவின் மூலம் பேசப்படுகிற விவாதங்களின் மூலமாக, கேட்கப்படும் கேள்விகளின் மூலமாக அது ஒரு புதிய அரசியலை தேர்ந்து எடுக்கும். அந்த அரசியல் தான் சாதியை ஒழிக்கும் என்று இயக்குநர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X