அமெரிக்காவில் அசத்திய மச்சான் நடிகை! குத்தாட்டம் போட்ட டிடி
தமிழ் சினிமாவில் நமிதா நடிக்கவில்லை என்றாலும் நமிதாவுக்கான ரசிகர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். நமிதாவின் இடத்தை நிரப்பப் போவதாகச் சொன்ன நடிகைகள் நாலே மாதங்களில் காணாமல் போய்விட்டனர் என்பதுதான் உண்மை.
தமிழகம் மட்டுமல்ல அமெரிக்காவிலும் நமீதாவின் ரசிகர்கள் அநேகம்பேர் உள்ளனர் என்பதை சொல்லாமல் சொல்லியது மெகா ஸ்டார் நிகழ்ச்சி.
ஜுலை 11ம் தேதி மாலை 6.30 மணிக்கு அட்லாண்டாவிலும், ஜுலை 13 சன் ஜோன்ஸிலும், ஜுலை 20ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸிலும் தமிழ் திரைப்பிரபலங்கள் கலந்துகொண்ட 'தமிழ் மெகா ஸ்டார் கொண்டாட்டம்' என்ற மாபெரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சித் தொகுப்பு டிடி
மெகா ஸ்டார் கொண்டாட்டத்தை தொகுத்து வழங்கியவர் விஜய் டிவியின் தொகுப்பாளினி டிடி.

ஜோடி நம்பர் 1 ஆனந்தி
நடிகர் டிங்குவின் தலைமையில் நடன நிகழ்ச்சிகள் அரங்கேற சின்னத்திரை நட்சத்திரங்கள் ஜோடி நம்பர் 1 புகழ் ஆனந்தி, டிஜே பிரசாந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நமீதா, நெப்போலியன்
நடிகை நமிதா, நடிகர் நெப்போலியன், சின்னத்திரைப் புகழ் ரோபோ ஷங்கர் போன்றோர் கலந்து கொண்டு அமெரிக்க வாழ் ரசிகர்களை மகிழ்வித்தனர்.

டிடி குத்தாட்டம்
தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அமெரிக்க போன டிடி அப்படியே தன்னுடைய ஹனிமூன் டிரிப்பை திட்டமிட்டிருந்தார். அதே கையோடு மெகாஸ்டார் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க கமிட் செய்து விட்டது டிங்கு டீம். மேடையில் டிடி போட்ட குத்தாட்டம் செம ஸ்பெசல் என்கின்றனர்.

கேட்வாக் போன நமீதா
சின்னத்திரை நட்சத்திரங்கள் உயிரைக் கொடுத்து நடனமாட மேடையில் கேட் வாக் போய் ரசிகர்களிடம் கைத்தட்டல் வாங்கிவிட்டாராம் நமீதா.


Click it and Unblock the Notifications











