டைட்டானிக்.. ஹாலிவுட்ல கப்பல் கவுந்துச்சு.. இங்க காதலே கவுந்துடுச்சு!

நகைச்சுவை கலந்த காதல் படமாக உருவாகி வருகிறது தமிழ் டைட்டானிக் படம்.

Recommended Video

தமிழில்..டைட்டானிக்...ஹாலிவுட்ல கப்பல் கவுந்துச்சு..வீடியோ

சென்னை : முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த காதல் படமாக தமிழில் உருவாகி வருகிறது டைட்டானிக் - காதலும் கவுந்து போகும் திரைப்படம்.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் ஹாலிவுட்டில் வெளியாகி உலகம் முழுவதும் வசூல் மழை பொழிந்த திரைப்படம் டைட்டானிக். இன்றளவும் இளைஞர்களால் காதல் காவியமாக இப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதே பெயரில் தமிழில் புதிய படம் ஒன்று உருவாகிறது. இதுவும் காதல் கதை தான்.

ஜானகிராமன்:

ஜானகிராமன்:

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரிக்கும் இப்படத்தை ஜானகிராமன் என்ற அறிமுக இயக்குநர் இயக்குகிறார். இவர் பாலாஜி மோகன், பாலா, சுதா உள்ளிட்டவர்களிடம் உதவி இயக்குநராக பணி புரிந்தவர்.

கயல் ஆனந்தி:

கயல் ஆனந்தி:

இப்படத்தில் கலையரசன், கயல் ஆனந்தி, ஆஷ்னா சவேரி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தெகிடி, சேதுபதி படங்களுக்கு இசையமைத்த கே.பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கலை இயக்குநராக ராம் பிரசாத்தும், படத்தொகுப்பாளராக ராதாகிருஷ்ணன் தனபாலும் அறிமுகமாகின்றனர்.

கிளைமாக்ஸ்:

கிளைமாக்ஸ்:

முழுநீள காமெடிப் படமாக உருவாகும் இப்படத்தின் கிளைமாக்ஸ் இதுவரை ரொமாண்டிக் காமெடி படங்களில் இல்லாத அளவிற்கு வித்தியாசமாக, திருப்புமுனையாக இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். நிச்சயம் படத்தின் பல காட்சிகள் பார்வையாளர்களை தங்கள் வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்தி பார்க்கும் வகையில் இருக்குமாம்.

கௌரவத் தோற்றம்:

கௌரவத் தோற்றம்:

இப்படத்தில் இயக்குநர் பாலாஜி மோகனும், நடிகை காயத்ரியும் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளனர். ஹாலிவுட் டைட்டானிக்கில் கப்பல் கவிழ்ந்து காதல் வாழும், இப்படத்தில் காதலும் கவிழ்ந்து போகும் என்ற தத்துவத்தைக் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X