வழக்கமான ஆரம்பம், வித்தியாசமான கிளைமாக்ஸ், வலியோடு ஒரு காதல்!
சென்னை: மற்ற காதல் படங்களைப் போன்று வழக்கமான ஆரம்பத்துடம் படம் துவங்கினாலும், நிச்சயம் படத்தின் கிளைமாக்ஸ் வித்தியாசமாக இருக்கும் என உறுதி கூறுகின்றனர் வலியுடன் ஒரு காதல் படக் குழுவினர்.
மாதாஸ் பிளசிங் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பி.ரவிராஜேஷ் தயாரித்துள்ள படம் 'வலியுடன் ஒரு காதல்'. ராஜேஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகை ராதாவின் சகோதரி மகள் கௌரி நம்பியார் நாயகியாக அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் மற்றும் சுரேஷ் வின்சென்ட்,லென்சின்,சபா,ஜே.கே.செல்வாஹ்,கோபால்,கெவின்,உமா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இப்படத்தை கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்குபவர் சி.எம்.சஞ்ஜீவன்.

வழக்கமான காதல்...
வழக்கமாக சினிமாக்களில் வருவது போல், கிராமத்து நண்பர்களுடன் ஊர் சுற்றுவது தான் நாயகனின் வேலையாம். அப்படி ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் போது பக்கத்து ஊரில் உள்ள பணக்கார பெண்ணை காதலிக்கிறார்.

குடும்பத்தில் எதிர்ப்பு...
அந்த பெண்ணும் நாயகனைக் காதலிக்கிறாள் ஆனால் அவர்கள் குடும்பத்தில் எதிர்ப்பு. அதனால் தன் காதலை நாயகனிடம் சொல்லாமல் மறைக்கிறாள்.

காதல் வாழ வேண்டும்...
ஒரு கட்டத்தில் நாயகன் ஏன் காதலை மறைக்கிறாய் என்று நாயகியிடம் கேட்க உடனே அவள் காதல் வாழ வேண்டும் காதலனும் வாழ வேண்டும் என்று விளக்கம் கூறுகிறாள்.

மயங்கி விழும் நாயகி...
பிறகு அவளும் காதலிக்க இருவரும் தனிமையில் சந்தித்து பேசுகிறார்கள் அப்போது அதை கதாநாயகியின் முறைமாமன் பார்த்துவிட இருவரும் சண்டை போட அதை பார்த்து கதாநாயகி மயக்கமாகிறார்.

வலியுடன் தொடரும் காதல்...
மயங்கிய நாயகியின் நிலை என்ன? நாயகனின் நிலை என்ன? இருவரும் என்ன ஆனார்கள் என வலியுடன் காதல் தொடர்கிறது இதுதான் படத்தின் இப்படத்தின் கதையாம்.

திகைப்பூட்டும் கிளைமேக்ஸ்...
இது தான் வழக்கமாக எல்லா சினிமாவிலும் வரும் கதை தானே என்பவர்களுக்கு, இப்படத்தின் இறுதியில் திகைப்பூட்டும் வித்தியாசமான கிளைமேக்ஸ் அமைத்துள்ளாராம் இயக்குநர்.

பாராட்டு நிச்சயம்...
நிச்சயமாக இந்த புதுமையான கிளைமேக்ஸ் அனைவராலும் பாராட்டப் படும் என இயக்குநர் உறுதியாகச் சொல்கிறார்.


Click it and Unblock the Notifications