»   »  வெள்ள காக்கா, மஞ்ச குருவி: பஞ்சுமிட்டாய் கலர் நாயகன், நாயகி

வெள்ள காக்கா, மஞ்ச குருவி: பஞ்சுமிட்டாய் கலர் நாயகன், நாயகி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமாவிற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசிக்கவே பல லட்சம் செலவு செய்யும் இந்த நேரத்தில் காக்காவை வெள்ளையாக்கி, குருவியை மஞ்சளாக்கி படத்திற்கு பெயர்வைத்துவிட்டார் ஒரு தயாரிப்பாளர்.

படத்திற்கு கலர்ஃபுல்லாக பெயர்வைத்ததோடு நிறுத்திவிடாமல் நாயகன் நாயகிக்கும் கலர்கலராக ‘ராமராஜன்' ஸ்டைல் கலரில் ஆடைகளைக் கொடுத்து ஆடவைத்துவிட்டனர்.

[வெள்ள காக்கா மஞ்ச குருவி படங்கள்]

குரு ராகவேந்திரா மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் எம்.குப்பன் தயாரிக்கும் படம் ‘வெள்ள காக்கா மஞ்ச குருவி.'

நாயகன் - நாயகி

நாயகன் - நாயகி

‘வெள்ள காக்கா மஞ்ச குருவி'யில் கார்த்திக்தாஸ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கத்தி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த அனு கிருஷ்ணா கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் தென்னவன், மீராகிருஷ்ணா, சக்திவேல், சேஷு இவர்களுடன் முக்கிய வேடத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார்.

கதை பழசுதான்

கதை பழசுதான்

கிராமத்தில் படித்த ஒரு இளைஞன் வேலை வெட்டியில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறான். அப்படிப்பட்டவனுக்கு ஒரு பணக்கார பெண் மீது காதல் வருகிறது(ரொம்ப பழைய கதை) என்று தன்னுடைய படத்தைப் பற்றி இயக்குநர் எஸ்.கே.முரளிதரன் கூறியுள்ளார்.

ஊர் பிரச்சினை

ஊர் பிரச்சினை

தனது அம்மாவுக்கு ஏற்பட்ட அவமானத்தால் வீட்டை விட்டு வெளியேறிய நாயகன், சமுதாயம் சம்மந்தப்பட்ட பிரச்னை ஒன்றை கையிலெடுத்து ஜெயிக்கிறான். ஊரே மெச்சுகிறது.

கதாநாயகனின் காதல் ஜெயித்ததா என்பதை கமர்ஷியலாக உருவாக்கியுள்ளோம் என்கிறார் இயக்குநர்.

திருத்தணி, திருப்பதியில்

திருத்தணி, திருப்பதியில்

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, அரக்கோணம், சோளிங்கர், ஊட்டி, திருத்தணி, திருப்பதி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. இன்றைய இளைஞர்களுக்கு ஒரு நல்ல மெசேஜ் சொன்ன திருப்தி இந்தப் படத்தினால் எங்களுக்கு ஏற்பட்டிருக்கு என்று கூறியுள்ளார் இயக்குநர்.

கூடை மேல கூடை வச்சு

கூடை மேல கூடை வச்சு

படத்தின் பாடல் காட்சிக்காக மூங்கில் கூடையும் பஞ்சுமிட்டாய் கலர் உடையும் அணிந்து நாயகன் நாயகியும் ஆடிப்பாடினர். பச்சை, மஞ்சள், நீலம் என நாயகி அனு அணிந்த கலர்ஃபுல் ஆடைகள் ஹைலைட்.

சைக்கிள் ஓட்டலாமே

சைக்கிள் ஓட்டலாமே

கதாநாயகிக்கு சைக்கில் ஓட்டக் கற்றுக்கொடுத்த நாயகன் ஒருமுறை கூட கீழே விழ விடாமல் பார்த்துக்கொண்டாரா என்பது தெரியவில்லை.

தமிழில் பேசிய நாயகி

தமிழில் பேசிய நாயகி

வெள்ளக்காக்கா மஞ்ச குருவி படத்தின் பாடல் வெளியீட்டு விழா கடந்த இருதினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இப்படத்தின் நாயகியாக என்னை தேர்வு செய்தது நான் செய்த பாக்கியம் என்றார் கதாநாயகி அனுகிருஷ்ணா.

நிறைய அடிவாங்கிய ஹீரோ

நிறைய அடிவாங்கிய ஹீரோ

படத்தில் ஹீரோ என்னிடம் நிறைய வாங்கினார் ஹீரோ என்ற நாயகி அனு, தன்னிடம் அடிவாங்கிய ஹீரோவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

எம். குப்பன் தயாரிப்பில்

எம். குப்பன் தயாரிப்பில்

இப்படத்தின் கதையை எழுதி இயக்கும் இப்படத்தை குரு ராகவேந்திரா மூவி மேக்கர்ஸ் என்ற படநிறுவனம் சார்பாக எம்.குப்பன் தயாரிக்கிறார். பவ.விஜய் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, ஜி.சாய்தர்ஷன் இசையமைக்கிறார். எஸ்.கே.முரளீதரன், ஸ்ரீ விஜய், சதீஷ்காந் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

English summary
Vella Kaakka Manja Kuruvi is a Tamil movie with production by Guru Raghavendra Movie Makers, M Kuppan, direction by S K Muralidharan. The cast of Vella Kaka Manja Kuruvi (aka) Vella Kaakka Manja Kuruvi includes Anu Krishna, Karthik Das.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil