இன்று எந்தெந்த படங்களுடைய ஆடியோ லாஞ்ச் என்று தெரிஞ்சிக்க இத படிங்க!
Recommended Video

சென்னை: நயன்தாராவின் கோலமாவு கோகிலா, பிரபுதேவாவின் லக்ஷ்மி திரைப்படங்களின் இசை வெளியீடு இன்று நடைபெற உள்ளது.
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் நயன்தாரா யோகிபாபு இணையும் வித்தியாசமான நகைச்சுவைப் படம் தான் கோலமாவு கோகிலா. அனிருத் இசையில் எதுவரையோ, கல்யாண வயசு ஆகிய பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்துள்ளன.

இன்று இந்தப்படத்தின் மற்ற பாடல்களும் ட்ரெயிலரும் வெளியிடப்படும் என்று அனிருத் ட்வீட் செய்துள்ளார்.
அதே போல், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தித்யா பாந்தே, கருணாகரன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் திரைப்படம் லக்ஷ்மி. இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.
லக்ஷ்மி திரைப்படத்தின் ட்ரெயிலரும், மொராக்கா என்ற பாடலும் ரிலீஸ் ஆகி ஹிட் அடித்திருக்கும் நிலையில், இன்று படத்தின் மற்ற பாடல்கள் ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன.
நிர்மல்குமார் இயக்கத்தில் பாரதிராஜா நடிக்கும் ஓம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 6 மணிக்கு இயக்குனர் வெற்றிமாறன் வெளியிடுகிறார்.
வெடிகுண்டு பசங்க எனும் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று மாலை சென்னையில் நடக்கிறது.
ஆன்லைனில் படம் பார்ப்பவர்கள் அதிகரித்துவிட்டதால்தான், இசைவெளியீடுகளை நடத்தாமல் பாடல்களை ஆன்லைனிலேயே வெளியிடுகிறார்கள் போலும்!


Click it and Unblock the Notifications











