நீட்.. நீட்.. நீட் தேர்வை மையப்படுத்திய திரைப்படங்கள் ஒரு பார்வை!

சென்னை: , நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறை இல்லாத போது, ஒரே மாதிரியாக தகுதித் தேர்வு நடத்துவது சரியா என்ற கேள்விக்கு இதுவரை சரியான பதில் கிடைத்ததில்லை. கல்விக்கான ஒரு நுழைவுத் தேர்வு என்ன செய்துவிடும்? அதை எதிர்கொள்வதால் யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்கிற கேள்வி பல ஆண்டுகளாக மனதிற்குள் எழுந்து கொண்டு தான் இருக்கிறது.

பொறியியல் படிக்க நடத்தப்படும் நுழைவுத் தேர்வை தமிழ்நாட்டில் ரத்து செய்ய முடிந்தபோது, ஏன் மருத்துவ நுழைவுத் தேர்வு நீட்டை மட்டும் ரத்து செய்ய முடியவில்லை? தமிழ்நாட்டில்தானே அதிக அளவிலான மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன? பல கேள்விகள் மனதிற்குள் வந்துள்ளதால், நீட் தேர்வு குறித்து தற்போது பல படங்கள் வெளிவருகின்றன. அவற்றை இப்போது பார்க்கலாம்.

NEET Tamil movies

அஞ்சாமை: அறிமுக இயக்குநர் சுப்புராமன் இயக்கத்தில் விதார்த், வாணி போஜன், ரகுமான், கிரித்திக் மோகன் உள்ளிட்ட பலர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் தான் அஞ்சாமை. இப்படத்திற்கு ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். நீட் தேர்வின் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், கல்வி முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இப்படம் அழுத்தமாக பேசி உள்ளது. நீட் தேர்வால் தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள், மாணவர்களின் தற்கொலைகள், பெற்றோர்களின் பரிதவிப்பு, பயிற்சி மையங்களின் படையெடுப்புகள், நீட் தேர்வு முறைகேடுகள், குளறுபடிகள் என தினமும் நாம் செய்தியில் பார்க்கும் படத்தை அஞ்சாமை படம் தோலுரித்து காட்டி உள்ளது.

எய்தவன்: இயக்குநர் சக்தி ராஜசேகரன் உருவான திரைப்படம் எய்தவன். இப்படத்தில் வேல.ராமமூர்த்தி, ராஜ்குமார், வளவன், சார்லஸ் வினோத் ஆகியோர் நடித்துள்ளனர். மருத்துவக் கல்லூரியில் சில காரணங்களால் இடம் கிடைக்காமல் போகிறது. தனியார் கல்லூரியை நாடுகிறார் கலையரசன். சில பல இடைத் தரகர்களைக் கடந்து, 50 லட்சம் நன்கொடை கொடுத்து, தங்கையை மருத்துவ கல்லூரியில் சேர்க்க, தங்கை படிக்கும் கல்லூரிக்கு அங்கீகாரம் ரத்து ஆகியிருப்பது தெரியவருகிறது. இந்த நேரத்தில், தங்கை இறந்துவிட, தன் தங்கையைப் போல மற்ற மாணவர்களும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நீதிக்காக போராடுகிறன் ஹீரோ கலையரசன். இப்படமும் இன்றைய கல்வி முறை குறை சொல்லும் திரைப்படமாக இருந்தது.

டாக்டர் அனிதா எம்பிபிஎஸ்: நீட் நுழைவுத்தேர்வு காரணமாக மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காததால் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தை அதிரவைத்த அனிதாவின் மரணத்தை அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டித்தன. அனிதாவின் பெயருக்கு இருக்கும் மரியாதை, அவரது இறப்பு போன்றவற்றை திரைப்படமாக்க முடிவு செய்யப்பட்டது.

தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அஜய்குமார் என்பவர் அனிதாவின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் வகையில் 'டாக்டர் அனிதா எம்பிபிஎஸ்' என்ற பெயரில் திரைப்படம் எடுக்க இருப்பதாக விளம்பரம் செய்தார். இந்தப் படத்திற்காக பூஜை போடப்பட்டது. இந்தத் திரைப்படத்தில் அனிதாவாக ஜூலி நடிக்கிறார். ஆனால், நஷ்ட ஈடு வழங்கக் கோரி, அனிதாவின் தந்தை சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், படப்பிடிப்பு நடைபெறாமல் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X