பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
சென்னை: வருடந்தோறும் பொங்கலன்று பெரிய ஹீரோக்களின் படங்கள், குடும்ப ரசிகர்களுக்கான படங்கள் வெளியாகும்.
இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக சில படங்கள் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக OTT யில் வெளிவந்துள்ளது.
மாஸ்டர் & ஈஸ்வரன் திரையரங்கிலும், பூமி & புலிகுத்தி பாண்டி OTT யிலும் வெளியாகியுள்ளது. அதனின் நிலவரம் என்னவென்று காண்போம்.

ஆக்ஷன் த்ரில்லர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது மாஸ்டர் திரைப்படம். ஆக்ஷன் த்ரில்லர் படமாக வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரசிகர்கள் திருப்தி
அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்ட சிறுவர்கள் செய்யும் முதல் குற்றத்தில் கதையை தொடங்கி, குற்றம் யாரால் ஏன் நடக்கிறது. அதன் பின்னணி என்ன என்பதை அழகாக படமாக்கி உள்ளார் லோகேஷ் கனகராஜ் ஆடியன்சை திருப்திபடுத்தியுள்ளது மாஸ்டர்.

தாண்டவ பொங்கல்
தனக்கு ஏற்பட்ட சறுக்கலை சரியான நேரத்தில் சரி செய்ய, உடல் இளைத்து, சிம்புவா இது என அனைவரையும் வாய்பிளக்க வைத்து, முழு வேகத்தில் படப்பிடிப்பில் கலந்துகொண்டு,கொரோனா காலத்திலும் படத்தை முடித்து தனது ரசிகர்களுக்கு சிம்பு அளித்த மகிழ்ச்சியான விருந்து தான் ஈஸ்வரன்.

ரசிகர்கள் திருப்தி
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதி ராஜா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ஈஸ்வரன் படத்தின் கதை ஏற்கனவே நமக்கு பழக்கப்பட்ட கதையாக இருந்தாலும் சலிப்பு தட்டாமல் திரைக்கதை அமைத்து குடும்ப ரசிகர்களையும், நீண்ட இடைவெளிக்கு பின் சிம்பு ரசிகர்களையும் திருப்திபடுத்தி உள்ளார் சுசீந்திரன்.
Recommended Video

ரவியின் பூமி
நம் நாட்டை நம் பூமியை கார்ப்பரேட்டுகள், நம் தொழியை, நம் விவசாயத்தை நம் மக்களை அழித்து அவர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார் என்பதை அழகாக நயமாக கூறும் படம் தான் பூமி. நாசாவில் வேலை பார்க்கும் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றொரு கிரகத்துக்குச் சென்று மனிதர்கள் வாழ முடியும் என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். இங்கு இருந்துதான் கதை தொடங்குகிறது.

கலவையான விமர்சனம்
லக்ஷ்மன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடிப்பில் நேரடியாக Hot Star OTT தளத்தில் வெளியாகி உள்ள இப்படம், விவசாயத்தை மையமாக வைத்து அவுட் டேடட் கதையை கொடுத்துள்ளது. மேலும், இது ஜெயம் ரவியின் 25வது படம் என்பதால் நடிப்பில் மிரட்டி உள்ளார் ஜெயம் ரவி, இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று தந்துள்ளது.

குடும்ப ரசிகர்களுக்காக
முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் நடிப்பில் நேரடியாக சன் டிவி யில் ஒளிபரப்பான படம் புலிக்குத்தி பாண்டி. தனக்கே உரிய பேடர்ன்னில் முத்தையா ஒரு உண்மை சம்பவத்தை கதையாக தந்து குடும்ப ரசிகர்களை கவர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications