குடும்பத்தோடு வந்த விஜயலட்சுமி.. மனைவி மகனுடன் வந்த கருணாஸ்.. திரையுலகினரின் ஒரு விரல் புரட்சி!
சென்னை : வாக்களிக்கும் முடிவும் தருவாயை நெருக்கிக்கொண்டு இருக்கும் நிலையில் நடிகர்கள் சத்யாராஜ், கருணாஸ் தனது குடும்பத்துடனும், அர்ஜூன் தனது குடும்பத்துடன் வாக்களித்தனர்.
சென்னையில் 3 மணி நிலவரப்படி 46.46 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன.
மாலை 6 மணிக்கு மேல் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் டோக்கன் அளிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஒரு விரல் புரட்சி
அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் காலையில் வாக்களித்துவிட்ட நிலையில் நடிகர் சத்தியராஜ் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். வாக்களித்து விட்டு காரில் அமர்ந்தவாறு தனது விரலை காட்டி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் வேகமாக பகிரப்பட்டுவருகிறது.

நடிகர் கருணாஸ்
முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும் நடிகருமான கருணாஸ், மனைவி க்ரேஸ் மற்றும் மகன் கேன் கருணாஸ் ஆகியோர் வாக்களித்தனர். இதே போல நடிகர் அர்ஜூன் தனது குடும்பத்தினருடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.
Recommended Video

தயவு செய்து ஓட்டு போடுங்க
நடிகர் ஆர்யா வாக்களித்து விட்டு, விரலில் மை இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் தயவு செய்து ஓட்டுப்போடுங்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர் நகுல், மாஸ்டர் குட்டி பவானி மகேந்திரன் ஆகியோர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

கடமை இனிதே முடிந்தது
நடிகை விஜயலட்சுமி, தனது தந்தை அகத்தியன், சகோகரிகளான நிரஞ்சனா, கார்த்திகா ஆகியோருடன் சென்று வாக்களித்தார். அந்த புகைப்படத்தை இணையத்தில்பதிவிட்டு, கடமை இனிதே முடிந்தது என்று கூறியுள்ளார்.மேலும், ஆர்.ஜே பாலாஜியும் வாக்களித்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











